செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம்,அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்செரிக்கை ஏற்பாடுகள் குறித்து மதுராந்தகம் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ)
லட்சுமி பிரியா அவர்கள் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, அச்சிறுபாக்கம்
பேரூராட்சியின் சுகாதார பணிகள் குறித்தும், அத்தியாவசிய கடைகளில் அரசின் நிபந்தனைகளை
பின்பற்றுகின்றனரா என்ற கோணத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது,
அச்சிறுபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, அச்சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர்
தமிழ்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம்,
சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன், காவல் துறையினர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment