செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் கடந்த 10 நாட்களாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கருங்குழி
பேரூராட்சி வார்டு 1,4, 5, 6, 7, 8 ஆகிய பகுதிகளில் இன்று (29.03.2020 | ஞாயிற்றுக்கிழமை) தூய்மைபணி செய்து பிளிசீங் கலந்த
சுண்ணம்பு தெளிக்கப்பட்டது. நேற்று (28.03.2020) சனிக்கிழமையன்று வார்டு 2, 3 ஆகிய பகுதிகளில் தூய்மைபணி செய்து பிளிசீங் கலந்த
சுண்ணம்பு தெளிக்கப்பட்டது.
கருங்குழி
பேரூராட்சி மக்களுக்கு அவசிய தேவைகளான குடிநீர், பொது
சுகாதாரம் மற்றும்
நோய் பரவல் தடுப்பு பணிகளை இந்த 144 ஊரடங்கு காலத்தில் 55 பேரூராட்சி
ஊழியர்கள் செயல்அலுவலர் கேசவன் கண்காணிப்பில் தன்நலம்
பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.
தினம் வீடுகள் தோறும் கழிவுகள்
சேகரிப்பு பணியும், நோய் பரவுல் தடுக்க
தினம் கிரிமி நாசனி தெளித்தல், ஆரம்ப
சுகாதார நிலையம், ஏடிஎம் மையங்கள். வழிபாட்டு தலங்கள், பேரூந்து நிறுத்தகங்கள், பொது மக்கள் நடமாடகூடிய கடை
பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளித்தல் போன்ற பணிகளில் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.
மக்களுக்கு
ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் அரசு அறிவிப்புகளை
விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது
குடிநீர்
விநியோகம் தடையின்றி குளோரினேஷன் செய்து வழங்கியும் குழாய்
பழுதுகளை உடனுக்குடன் சீர் செய்தும் தடையில்லாமல் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
வெளியூர்களிலிருந்து
வரும் பணியாளர்களுக்கு வண்டி வசதி செய்யப்பட்டு அந்த ஊழியர்களுக்கு
மதிய உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
பணியாளர்களுக்கு பாதுகாப்பு
கவசங்கள், கிருமி
நாசனி, சோப்பு
வழங்கியும் நோய் பரவுதலில் இருந்து தற்காத்து
கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
சில இடங்களில் பொது மக்கள் சிலர்
தடை உத்தரவு மீறுபவர்களை போலீஸ்
உதவியுடன் எச்சிரிக்கை விடுத்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது. கருங்குழி
பேரூராட்சி பொதுமக்கள் புகார் குறைகள் தெரிவிக்க
கைப்பேசி எண் 7824058572 அறிவிக்கப்ட்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment