செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் ஊராட்சியில்
கொரோனா வைரஸ் தடுப்பு சம்மந்தமாக மஞ்சள், வேப்பிலை, பசுஞ்சாணம், நீர் கலந்து பவர் ஸ்ப்ரேயர்
மூலம் அந்த பகுதி இளைஞர்கள் மூலம் அனைத்து தெருக்கள் மற்றும் பொது இடங்களில் தெளிக்கப்பட்டது.
மேலும், கொரோனா விழிப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சுரங்கள் அச்சிறுபாக்கம்
வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெரோம் ஆனந்த், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி,
ஊராட்சி செயலர் ஷகீலாபானு ஆகியோர் மூலம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment