செங்கல்பட்டு மாவட்டம்,
செய்யூர் வட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது மேல்மருவத்தூர் மற்றும்
சோத்துப்பாக்கம் ஊராட்சி.
இந்த ஊராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
மேலும், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி வழிபாட்டுத்தலம் போன்ற முக்கிய பகுதிகள் உள்ளன.
இங்குள்ள பொதுமக்களுக்கு கொரோனா வைரஸிலிருந்து காத்துக்கொள்ள, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி மற்றும் நிர்மலன் ஆகியோர் வட்டார
ஒருங்கினைப்பாளர் சுரேஷ், மேல்மருவத்தூர் மற்றும் சோத்துப்பாக்கம் ஊராட்சி செயலர்களுடன்
இணைந்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஆட்டோ மூலம் அறிவிப்பு அளித்தும் நேற்று (25.03.2020) விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நேற்றைய தினம் திறக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளிலும் வீடுகளுக்கும்
சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment