செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி பணிகளை கவனித்து வந்தவர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெரோம் ஆனந்த்.
இவர் சில முறைகேடுகள் செய்த ஊராட்சி செயலர்களுக்கு சலுகைகள் வழங்கியதாகவும், ஊராட்சி நிதியில் பணம் இருந்தும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனவும் தெரிகிறது.
தற்போதைய காலகட்டத்தில் துப்புரவு பணியாளர்களின் ஆதரவு இல்லாமால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லாத விஷயம். ஆனால் துப்புரவு பணியாளர்களின் ஊதிய விஷயத்தில் அலட்சியம் காட்டியதனாலேயே அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது வட்டார வளர்ச்சி அலுவலராக முத்துக்குமரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே, மறைமலைநகர் பயிற்சி அலுவலகத்தில் பணிபுரிந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment