செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில்
நேற்று (29.03.2020) சுற்றுவட்டார
பகுதியில் 15 வார்டுகளிலும் மனநலம்
பாதிக்கபட்டவர்கள், வீடற்ற ஏழைகள் கண்டறியப்பட்டு பேரூராட்சியின் செயல்அலுவலர்
முனுசாமி ஹேண்டு
இன் ஹேண்டு மேற்பார்வையாளர் நவரத்தினம்,
மற்றும் பரப்புரையாளர் வர்ஜனா ஆகியோருடன
இணைந்து உணவு வழங்கினர்.
அச்சிறுபாக்கம்
பேரூராட்சியில் பேரூராட்சியின் செயல்அலுவலர் முனுசாமி அவர்களின்
தலைமையில் கொரானா வைரஸ்
நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம்
அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று (29.03.2020)
நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர்
சரவணன், சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன். தன்னார்வலர்கள் கண்ணன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
அச்சிறுப்பாக்கம்
பேரூராட்சியில் கொரானா வைரஸ் நோய்
தடுப்பிற்காக ஊரடங்கு உத்தரவினை ஒழுங்குபடுத்த
பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் பணி இடத்தில்
கொசு மருந்து அடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment