வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 19-ம் தேதி ரேஷன் கடைகள் அடைக்கப்படுமா...? மதுராந்தகத்தில் சங்கத்தலைவர் ஆலோசனை | Is Ration Shop strike...?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, March 07, 2020

19-ம் தேதி ரேஷன் கடைகள் அடைக்கப்படுமா...? மதுராந்தகத்தில் சங்கத்தலைவர் ஆலோசனை | Is Ration Shop strike...?

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசின் போக்கை கண்டித்து வருகிற 19ந்தேதி ரேன்கள் அடைக்கப்படுமா..?

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசின் போக்கை கண்டித்து வருகிற  19ந்தேதி தமிழகமெங்கும் உள்ள ரேஷன் கடைகள் அடைக்கப்படும் என சங்கத் தலைவர் ஜி.ராஜேந்திரன் மதுராந்தகம் நகரில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.



தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளார் சங்கத்தின் சார்பாக மதுராந்தகம் தனியார் திருமண மண்டபத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுராந்தகம் நகர தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலர் பா.தினேஷ்குமார், மாநில துணை செயலர் எம். சங்கார் மாநில பொருளாளர்  ஆர்.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சங்கர், சதீஸ்குமார், கணேசன, ராமு உன்னிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சங்க மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்
தமிழகமெங்கும் உள்ள ரேஷன் கடைகளில் ஊழியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்காமல் அரசு இழுத்தடித்து வந்துள்ளது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வர சங்க நிர்வாகிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதின் அடுத்து கூட்டுறவு பதிவாளர் தலைமையில் ஊதியக்குழு அமைத்தது.

ஆனால் அரசு இதுவரை ஊழியர்களுக்கு ஊதியம் சம்பந்தமாக எதையும் அமுல்படுத்தாமல் இருந்துள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தில் 110விதியின்படி நிதி தொடர்பில்லாதநிலையில் அறிவிக்கப்பட்ட 11 பரிந்துரைகளை உடனே அமல் படுத்தவேண்டும். வாழ்வாதாரத்தை பாதிக்காதநிலையில் உடனடியாக ஊதியத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். 100 சதவிகிதம் பொருட்களை அரசு வழங்கவேண்டும். அதாவது முழு ஒதுக்கீடு செய்துபொருட்களை வழங்கினால் பொருட்களை வாங்குகின்ற ஊழியர்களுக்கும் மக்களுக்கும் பிரச்சினை இல்லாமல் போகும்.


ரேஷன்கடை ஊழியர்களின் மூலம் மளிகைபொருட்களை வலுக்கட்டாயமாக  மக்களிடம் விற்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். கூட்டுறவு கடைகளுக்கு வருகின்ற அனைத்துப் பொருட்களும் குறைந்த எடையில் வருவதை  அதிகாரிகள் முறையாக கண்காணித்து சரியான முறையில் சரியான எடையில்  ரேஷன் கடைகளுக்கு வழங்கவேண்டும். பெரும்பாலான மாவட்டங்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை ஏடிஎம் கார்டுகள் மூலம் வழங்காமல் இருந்து வருகிறது.

இதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவேண்டும். அரசு ஊழியர்களுக்கு அறிவித்தப்படி அகவிலைப்படி வழங்கி இருந்தாலும் ரேஷன்கடை ஊழியர்களுக்கு ரூ 114 ஊதியத்துடன் இணைத்து வழங்காமல்  இருந்து வருகிறது. அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைபடி ரூ 114 நிலுவை தொகையொடு ஊதியத்தில் இணைத்து வழங்க வேண்டும். தமிழகத்தில் 34860 ரேஷன்கடைகள் உள்ளன. அவற்றில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு தொகையை அரசிடம் முறையாக செலுத்தாமல் உள்ளதை தெரிய வருகிறது.


எனவே அத்தொகையை அரசு செலுத்திட முன்வரவேண்டும். மத்திய அரசினால் கொண்டு வரப்பட்ட ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்தை என்றும் அமுல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. அதில் நடைமுறை சிக்கல்களும் பல்வேறு தவறுகளும் நடைபெற உள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆகியோர்களின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் வருகிற 19ந்தேதி (வியாழன்கிழமை) அன்று தமிழகமெங்கும் உள்ள அனைத்து ரேஷன்கடைகளை அடைக்கும் போராட்டத்தை செய்யப்படும் என அப்போது மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன் பேசினார்.

No comments:

Post a Comment