காஞ்சிபுரம் மாவட்டம்,
சின்ன காஞ்சிபுரம், டோல்கேட் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி சீதா, 65.
இவரது மகள் தனலட்சுமி, 30. மகன் பாலாஜி, 28; தனியார் நிறுவன ஊழியர்; தனியாக
வசிக்கிறார்.சீனிவாசன், சில ஆண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார்.
தாயும்,
மகளும் தனியாக வசித்தனர்.இருவரும், பல ஆண்டுகளாக தனிமையில் இருந்ததால், மன
நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம்
பக்கம் உள்ளவர்களிடம் பழகுவதும் இல்லை.
இந்நிலையில்,
நேற்று முன்தினம் காலை, வீட்டுக்கு சென்ற பாலாஜி, அம்மா, அக்காவை பார்த்து
விட்டு, பணிக்கு சென்றார். மாலையில், வீட்டுக்குசென்றபோது, வீட்டின் கதவு
உள்பக்கம் பூட்டியிருந்தது.
இவரது தகவலையடுத்து வந்த விஷ்ணு காஞ்சி
போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, தாய், மகள் என, இருவரும்,
துாக்கில் தொங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்தது.இறந்தவர்கள் சடலத்தை
மீட்ட போலீசார், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு
அனுப்பி, விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment