வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருக்கழுகுன்றத்தில் நடைபெறவிருந்த குழந்தைத் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு செங்கல்பட்டு – இலத்தூர் மணமக்களின் திருமணம் நிறுத்தம் Stoping Child Marriage in Thirukazhukundram
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, February 26, 2020

திருக்கழுகுன்றத்தில் நடைபெறவிருந்த குழந்தைத் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு செங்கல்பட்டு – இலத்தூர் மணமக்களின் திருமணம் நிறுத்தம் Stoping Child Marriage in Thirukazhukundram

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருக்கழுகுன்றத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை (26.02.2020) நடைபெறவிருந்த குழந்தைத் திருமணத்தை நேற்று இரவு வரவேற்ப்பிற்கு முன்னரே குழந்தை பாதுகாப்புத் துறை (Childline) அதிகாரிகளும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்தியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.


செங்கல்பட்டு, திருப்போரூர் கூட்ரோடு பகுதியில் வசித்து வரும் சம்பத் – பத்மாவதி தம்பதியர்களின் மகனுக்கும், செய்யூர் வட்டம், இலத்தூர் பகுதியைச் சார்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகளுக்கும் நேற்று திருக்கழுகுன்றத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு மற்றும் இன்று திருமணம் நடக்கவிருந்த தருணத்தில், தகவலறிந்து விரைந்து வந்த மாவட்ட சைல்டுலைன் குழு உறுப்பினர் வினோலியா, யுனிஷா மற்றும் திருக்கழுகுன்றம் இ2 காவல்நிலைய ஆய்வாளர், இலத்தூர் சமூக நலத்துறை GS ஆகியோர்கள் இந்த குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். 

பின்னர், மணமகனிடம் முறையான கடிதம் பெற்று, பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்வேன் என்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், மணமக்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

மணமகளுக்கும் மாவட்ட சைல்டுலைன் குழு உறுப்பினர் வினோலயா முறையான விழிப்புணர்வையும், அறிவுரைகளையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment