செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர்
வட்டம், திருக்கழுகுன்றத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை (26.02.2020)
நடைபெறவிருந்த குழந்தைத் திருமணத்தை நேற்று இரவு வரவேற்ப்பிற்கு முன்னரே குழந்தை பாதுகாப்புத்
துறை (Childline) அதிகாரிகளும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்தியதால் சற்று பரபரப்பு
ஏற்பட்டது.
செங்கல்பட்டு, திருப்போரூர் கூட்ரோடு பகுதியில் வசித்து வரும் சம்பத் – பத்மாவதி தம்பதியர்களின் மகனுக்கும், செய்யூர் வட்டம், இலத்தூர் பகுதியைச் சார்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகளுக்கும் நேற்று திருக்கழுகுன்றத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு மற்றும் இன்று திருமணம் நடக்கவிருந்த தருணத்தில், தகவலறிந்து விரைந்து வந்த மாவட்ட சைல்டுலைன் குழு உறுப்பினர் வினோலியா, யுனிஷா மற்றும் திருக்கழுகுன்றம் இ2 காவல்நிலைய ஆய்வாளர், இலத்தூர் சமூக நலத்துறை GS ஆகியோர்கள் இந்த குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
பின்னர், மணமகனிடம் முறையான கடிதம் பெற்று, பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்வேன் என்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், மணமக்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
மணமகளுக்கும் மாவட்ட சைல்டுலைன் குழு உறுப்பினர் வினோலயா முறையான விழிப்புணர்வையும், அறிவுரைகளையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment