செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம்,
சோத்துப்பாக்கத்தில் இன்று காலை 10 மணியளவில் அல்ப்ரிடோ கூமோ குழுமம் மற்றும் செண்டிவாக்கம்
ஆர்.சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சார்பாக பிரம்மாண்ட ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சோத்துப்பாக்கம் லூர்து நகர் தேவாலயத்தில் துவங்கிய இந்த பேரணியினை அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் மேல்மருவத்தூர் காவல் துணை ஆய்வாளர் தேவதாஸ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
வந்தவாசி சாலை, சோத்துப்பாக்கம் பஜார் பகுதி
என அனைத்து பகுதிகளிலும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி
முழக்கமிட்டு ஹெல்மெட் அணிவதன் கட்டாயத்த்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர்.
பேரணி துவங்குவதற்கு முன்னர் நடத்திய நிகழ்ச்சியில்
செங்கல்பட்டு மறைமாவட்ட ஆர்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளர் ரோச் இனேஷியஸ், கூமோ திட்ட
மேலாளர் சார்லஸ் குழந்தை, பள்ளியின் தாளாளர் ஆராக்கிய ரேமண்ட் ஆகியோருடன் அச்சிறுபாக்கம்
காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் மேல்மருவத்தூர் காவல் துணை ஆய்வாளர் தேவதாஸ் ஆகியோர்
குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவங்கினர். இந்த பேரணியில் பள்ளி தலையாசிரியை மற்றும்
சக ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
பள்ளி மாணவர்களின் இந்த தலைக்கவசம் அணிவதின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் பேரணியை அனைத்து பொதுமக்களும் வரவேற்றனர்.
No comments:
Post a Comment