விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலம் எனுமிடத்தில் இன்று காலை (14.02.2020) சுமார் 8 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில் டாட்டா ஏசிஇ மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் டாட்டா ஏசிஇ ஓட்டுநர் அன்பு (28) பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மதூர் கிராமத்தைச் சார்ந்தவர் வியாபாரி சீனிவாசன் உடையார். இவரது மகன் அன்பு என்பவர் இன்று காலை ஆடு விற்பனை செய்வதற்காக டாட்டா ஏசிஇ வாகனம் மூலம் சென்று வீடு திரும்பியபோது செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலம் எனுமிடத்தில் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகேயுள்ள வயல்வெளியில் கழிந்தது. டாட்டா ஏசியில் சென்ற மூவரில் ஓட்டுநர் அன்பு உயிரிழந்தார். உடன் சென்ற ஓட்டுநரின் சகோதரர் அருணகிரி மற்றும் ஏகாம்பரம் ஆகியோருக்கு காலில் பலத்த எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டது.
எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment