செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், சோத்துப்பாக்கம் அரசு
மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ,
மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு
விழிப்புணர்வு மற்றும்
தீயணைப்பு மீட்புப்பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது .
அரிமா சங்கம்
(LION’s CLUB), மேல்மருவத்தூர்
காவல் நிலையம், அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து சோத்துப்பாக்கம் அரசு
மேல்நிலைப் பள்ளியில் இருந்து தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள சோத்துப்பாக்கம் மேம்பாலம்
வரை பேரணியாக
சென்று சாலை பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் பற்றிய விழிப்புணர்வுகளை
பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும், பள்ளி
மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு, இயற்கை இடற்பாடுகளில் செய்ய வேண்டிய துரித
நடவடிக்கைகள் என பல்வேறு முக்கிய விழிப்புணர்வுகள் பற்றி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்
துறை மற்றும் காவல்துறை மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
மேல்மருத்தூர் காவல் ஆய்வாளர் சரவணன் (பொறுப்பு), துணை ஆய்வாளர், தீயணைப்பு நிலைய அதிகாரிகள்,
மேல்மருவத்தூர் அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்
சக ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கும், பொதுமக்களுக்கும்
விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
No comments:
Post a Comment