செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்
வட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகின்றனர். இதில்
80% மக்களுக்கு விவசாயமே பிரதான வாழ்வாதாரமாக விளங்குகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு
பொழிய வேண்டிய பருவ மழையின் அளவு மிகவும் குறைவானதால், ஏரிநீர் பாசனத்தை நம்பி இருந்த
சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலம் வெறும் நிலமாக உள்ளது. மழையை நம்பி ஏர் உழுது காத்திருந்த
விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் நீர் இல்லாததால்
ஏரி பாசனத்தை நம்பிய விவசாயிகள் நிலைகுலைந்துள்ளனர். எனவே, இந்த ஆண்டு பொங்கல் விழாவினை
கொண்டாடும் சூழலே எங்களுக்கு இல்லை என மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் பெரும்பாக்கம்
கிராம விவசாயிகள்.
எனவே, தமிழக அரசின் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கள்
கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, தக்க நிவாரணம் வழங்க வேண்டுமென குமுறுகின்றனர் பெரும்பாக்கம்
கிராம விவசாயிகள்.
No comments:
Post a Comment