காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் உடை மாற்ற தனி அறை இல்லாமல் பெரும் சிரமத்துக்குள்ளாவதாக செவிலியர்கள் வேதனைபடுகின்றனர்.
உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள அரசு மருத்துவமனை, 50க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் இயங்கி வருகிறது. இங்கு, எட்டு செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தினமும், 500 முதல் 700 நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில்
உள் நோயாளிகள், புற நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு என தனித்தனி கழிப்பறை வசதி உள்ளது. ஆனால், செவிலியர் மற்றும் ஊழியர்களுக்கு என தனி கழிப்பறை வசதி இல்லை. மேலும், செவிலியர்கள் உடை மாற்றும் அறையும் இல்லை.
இதனால், பிரசவ வார்டில் செவிலியர்கள் உடைமாற்றி வருவதாகவும், அப்போது, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள தாய்மார்களையும், பிறந்த குழந்தையையும் பார்க்க ஆண்கள் யாராவது உள்ளே வந்துவிடுவார்களோ என்ற அச்சத்துடனே அவர்கள் உடையை மாற்றுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, செவிலியர்கள் உடை மாற்றவும், ஊழியர்களுக்கும் என தனி கழிப்பறையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
எனவே, செவிலியர்கள் உடை மாற்றவும், ஊழியர்களுக்கும் என தனி கழிப்பறையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
No comments:
Post a Comment