நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பன்னீர்குத்தி ஊராட்சி ஆண்டிவலசு பகுதியைச் சேர்ந்த கந்தசாமியின் 2-ஆவது மனைவி சடையம்மாள். இவர்களுக்கு ஒரு மகன்,4 மகள்கள் உள்ளனர்.
இவர்களது மூத்த மகளான வெள்ளையம்மாளுக்கு 3 வருடங்களுக்கு முன் கல்யாணமாகி 3 மாதத்திலேயே விவாகரத்து பெற்றார். இவர் பெற்றோருடன் வசித்து வந்தார்.
அதேபோல நாமக்கல் கொசவம்பட்டி அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்து. ஜோதிடம், குறி சொல்லும் வேலை பார்த்து வருகிறார். முத்து, வெள்ளையம்மாளின் தாய்மாமன் மகன் ஆவார்.
இந்நிலையில் வெள்ளையம்மாளுக்கும், முத்துவிற்கும் உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் போனில் பழகி வந்த இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த உறவை வைத்து உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என வெள்ளையம்மாளிடம் கூறி கொஞ்சம் கொஞ்சமாக ரூ 1 லட்சத்து 20 ஆயிரம் பணம் மற்றும் நகைகளை வாங்கியுள்ளார்.
இந்த பணம், நகைகள் முத்துவிடம் கொடுத்தது பெற்றோர்களுக்கு தெரியவர திருப்பி வாங்கும்படி வெள்ளையம்மாளிடம் பெற்றோர் கூறியுள்ளனர். இது குறித்து வெள்ளையம்மா முத்துவிடம் கேட்டதற்கு பணம் நகைகளை கொடுக்காமல் திட்டியுள்ளார்.
தனக்கு மேலும் ரூ 1 லட்சம் கடன் உள்ளது. அதை கொடுத்துவிட்டால் நாம் எங்காவது போய் கல்யாணம் செஞ்சிக்கலாம். எனவே மேலும் கொஞ்சம் நகைகளை வீட்டிலிருந்து கொண்டு வா என வெள்ளையம்மாளிடம் முத்து சொல்ல, முத்து சொல்வதை நம்பி வெள்ளையம்மாள் வீட்டில் இருந்த ஏழரை பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு முத்துவிடம் பணம், நகைகளை வாங்க நாமக்கல் செல்கிறேன் என பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
வாங்கிய பணம், நகைகளை திருப்பித் தரவேண்டும் வெள்ளையம்மாவையும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என பல நெருக்கடிகள் முத்துவிற்கு இருந்ததால் வெள்ளையம்மாளை கொன்றுவிட பிளான் போட்டு, கடந்த 10 ந்தேதி வெள்ளையம்மாளை அழைத்து கொண்டு திருச்சி மண்ணச் சநல்லூர் அருகே துடையூர் பகுதிக்கு வந்தார். அப்போது கொள்ளிடம் ஆற்றின் கரையில் வைத்து கழுத்தை அறுத்து கொன்று புதைத்து விட்டு தப்பியுள்ளார்.
வெள்ளையம்மாளை காணவில்லை என அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் வெள்ளையம்மாள் போனை ஆய்வு செய்ததில் முத்து அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது. பின்னர் முத்துவை பிடித்து விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இந்நிலையில் கொலையான பெண்ணின் உடல் புதைக்கப்பட்ட இடம் தெரிந்து 22 மணி நேரமாகியும் உடற்கூறு ஆய்வு செய்ய டாக்டர் வராததால் உடலை தோண்டும் பணி தாமதமானது.
No comments:
Post a Comment