செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தவறி விழுந்ததால் விபத்து ஏற்பட்டது.
மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் மூர்த்தி (வயது 24).இவர் தனது நண்பர் சாந்தகுமார் (வயது 20) என்பவருடன், நேற்று முன்தினம் மாலை, மதுராந்தகத்தில் இருந்து பெரும்பாக்கத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார்.
மேல்மருவத்துார் அருகே, நிலை தடுமாறிய இவரது இருசக்கர வாகனம் விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் இருவரில் மூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மேல்மருவத்துார் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

No comments:
Post a Comment