திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், 1வது வார்டில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பச்சையம்மாள், 30 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், தி.மு.க.,வினர் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வந்தவாசியில், காஞ்சிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் பேசி மறியலை கைவிட செய்தனர்.
* திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில், திருவண்ணாமலை யூனியன் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அங்கு ஒரு ஓட்டுப்பெட்டி காலியாக திறந்து கிடந்தது. இதனால், தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம், அந்த ஓட்டுப்பெட்டி மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த பயன்படுத்தப்பட்டவை என கூறியதையடுத்து, வாக்குவாதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
* செய்யாறில் தபால் ஓட்டுப்பெட்டியின் சாவி, திடீரென காணாமல் போனதால், பெட்டியின் ஸ்குருவை கழற்றி பெட்டியை திறந்தனர். வந்தவாசி ஓட்டு எண்ணும் மையத்தில், கண்டவரப்பட்டி பகுதிக்கான ஓட்டுப்பெட்டி பூட்டை சாவி மூலம் திறக்க முடியாததால், கல்லால் பூட்டை உடைத்து திறந்தனர். இந்நிலையில், செங்கத்தில் நடந்த ஓட்டு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment