செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி (பெயர் குறிப்பிடப்படவில்லை)
கடும் வயிற்று வலி காரணமாக வெள்ளிக்கிழமை அச்சிறுபாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்
சேர்க்கப்பட்டார். பின்பு சேர்க்கப்ட்ட 15 நிமிடங்களிலேயே சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியுற்ற
அந்த சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் காஞ்சிபுரம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளை அணுகி முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து அச்சிறுபாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்து வந்த குழந்தைகள்
பாதுகாப்புத் துறை குழு உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களிடம்
விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், குழந்தை
உருவாக காரணமாக இருந்த நபர் தற்போது எங்கு உள்ளார் என்ற விவரம் தெரியவில்லை எனவும்,
இதுகுறித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில்
புகார் அளித்துள்ளதாகவும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியும் அந்த வாலிபரும் வெகு நாட்களாக காதலித்து வந்ததாகவும்திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டிஇந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
காவல் துறையினரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு பிறகே இந்த சம்பவம் குறித்த முழு விவரம்
தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment