வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உள்ளாட்சித்தேர்தல் தேதியை அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம் | TN Local Body Election
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 02, 2019

உள்ளாட்சித்தேர்தல் தேதியை அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம் | TN Local Body Election

2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.




தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. வரும் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.


டிசம்பர் 13-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 18-ம் தேதிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறலாம். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்கும். ஊராடி வார்டு,  ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடக்கும்.


கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும். ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வெள்ளை நிறத்திலும் கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.


மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி, ஊராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ம் தேதி நடக்க உள்ளது.
பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

1 comment: