செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில்
காஞ்சி கிழக்கு மற்றும் காஞ்சி மேற்கு மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
சார்பாக மாநிலத்தலைவர் A.M.விக்கிரமராஜா அவர்களின் ஆலோசனைப்படி, காஞ்சி மண்டல தலைவர்
M.அமல்ராஜ் அவர்களின் தலைமையில் "ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து" இன்று காலை (17.12.2019) மாபெரும் கண்டன ஆர்பாட்டம் மற்றும் கடையடைப்பு
நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தை மதுராந்தகம் அனைத்து வணிகர்கள் பொதுநல சங்க தலைவரும் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளருமான G.J.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரை வழங்கி துவக்கி வைத்தார்.
மேலும் மதுராந்தகம் அனைத்து வணிகர்கள் பொதுநல சங்க செயலாளர் N.அப்துல் சமத், பொருளாளர் S.ஹீராலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். AMAZON, FLIPKART போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சுயலாபத்திற்காக வணிகர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதை கண்டித்து கடையடைப்பு ஆர்பாட்டத்தில் வணிகர்கள் அனைவரும் ஈடுபட்டு ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து பல்வேறு கண்டன கோஷங்களை முழங்கினர்.
மேலும் அரசாங்கமும் ஆன்லைன் வர்த்தகத்தினை படிப்படியாக முடக்க வேண்டும் என போராட்டத்தில் கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கமிடப்பட்டது.

No comments:
Post a Comment