செங்கல்பட்டு
மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள சூரக்கோட்டை ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயிலில்
ஶ்ரீஅனுமந் ஜெயந்தி நாளையொட்டி 108 பால்குட உற்சவ பெருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது.
இந்த விழாவில் கோயில் நிறுவனர் வேணுதாஸ் சுவாமிகள் தலைமையில் 25.12.2019 காலை 10 மணிக்கு
பிரசித்தி பெற்ற மதுராந்தகம் ஶ்ரீஏரிகாத்தராமர் கோயில் குளத்தின் கரையிலிருந்து
108 பால்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
பின்னர்,
ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு 108 பால்குட அபிஷேகம் செய்யப்பட்டு
சிறப்பு அலங்காரம், மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம்
வழங்கப்பட்டன.
இந்த கோயிலின் சிறப்பு என்னவெனில் "தூணை பிளந்து காட்சி தரும் 43 அடி உயர ஶ்ரீஉக்கிரநரசிம்மர் தமிழ்நாட்டிலேயே
இங்குதான் அருள்பாலிக்கிறார்". அவருக்கு எதிரே 21 அடி உயரத்தில் ஶ்ரீஆஞ்சநேயர்
காட்சியளிக்கிறார்.
மேலும்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த ஆனைக்குன்னம் ஶ்ரீசஞ்சீவிராயர் திருகோவிலிலும்
அனுமந் ஜெயந்தி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment