வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் ஏரியை அணையாக மாற்றி சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய திட்டமா…? Madurantakam Dam Project News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 19, 2019

மதுராந்தகம் ஏரியை அணையாக மாற்றி சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய திட்டமா…? Madurantakam Dam Project News

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியானது இம்மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி என்ற பெருமைக்குரியது. மதுராந்தகம் ஏரியானது 2411 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். 
இந்த ஏரி பாசனத்தினால் சுமார் 2853 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகிறது. ஏரியின் முழு கொள்ளளவு 23.3 அடியாகும். 694 கன அடி நீர் தேக்கி வைக்கப்படுகிறது. மதுராந்தகம் ஏரியின் பாசன வசதியினால் ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மூன்று போகங்களிலும் செழிப்பாக உள்ளது. சுமார் 30 கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் இந்த ஏரியினால் குடிநீர் தட்டுப்பாடின்றி உள்ளனர். 
 
60 ஆண்டுகளுக்கு முன் இந்த ஏரி தூர்வாரப்பட்டது. தற்போது 6 முதல் 7 அடி வரை மண் படிந்து ஏரியின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதாகவும், இதனால் அதிக நீர் வீணாவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வேதனை தெரிவித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் நேரடியாக பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளப்படவில்லை என்பதே இந்த குற்றச்சாட்டாகம்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் சுமார் 10 லட்சம் லாரிக்கு மேல் மண் எடுத்தால் மட்டுமே ஏரியை முழுமையாக தூர் வார முடியும் எனவும் ஆனால் அந்த மண்ணை கொட்டுவதற்கு இடமில்லை எனவும் இதனாலேயே இத்தனை ஆண்டுகாலமாக தூர்வாரப்படவில்லை எனவும் புள்ளிவிவரங்களை அடுக்கினர்.
மேலும் தற்போது உள்ள 110 தானியங்கி ஷட்டர்கள் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகவும் தற்போது இதில் சிறிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஏரியின் பாதுகாப்பு காரணமாக மதுராந்தகம் ஏரியை அணையாக மாற்றப்பட உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், படகு மூலம் ஏரியின் அனைத்து பகுதிகளிக்கும் சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் ஆழம் கணக்கிடுதல் மற்றும் பிற சோதனைகளை முடித்தபின்னர் புதிய அணை கட்டுவதற்கு சுமார் "2000 கோடி" செலவாகும் என தெரிவித்துள்ளனர்.
தற்போது 694 கன அடியாக உள்ள நீரானது 1 டி.எம்.சியாக தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 1 டி.எம்.சி தண்ணீரில் 700 கன அடி நீர் விவசாய பாசனத்திற்கும் 300 கன அடி நீர் சென்னை குடிநீருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 
இதுமட்டுமல்லாமல் ஏரிக்கரைமீது பொழுதுபோக்கு சுற்றுலா தளம் அமைக்க திட்டம் தயார் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்த நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். 
60 ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் தற்போது அணையாக மாற்றப்பட எடுத்துள்ள முடிவு தமிழக அரசின் சாதனையா..? அல்லது விவசாயிகளுக்கு கிடைத்த ஆறுதலா..? என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும். 


No comments:

Post a Comment