செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம்
பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை
திட்டமும், கருங்குழி பேரூராட்சியில் கசடு
கழிவுநீர் மேலாண்மை
திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கசடு
கழிவுநீர் மேலாண்டை திட்டமானது தமிழகத்திலேயே முதன் முறையாக செயல்படுத்தப்பட்டு
வரும் திட்டமாகும்.
இந்த திட்டங்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் செயல்படுதவதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் மேற்கண்ட திட்டங்களுக்கான கள ஆய்வினை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகளின் இயக்குனர் உத்தரவின் பேரில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் இயங்கிவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் கருங்குழியில் உள்ள கசடு கழிவுநீர் மேலாண்மை திட்டம் குறித்த பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
இந்த கள ஆய்வின் போது குப்பைகளை தரம் பிரித்தல், குப்பைகளிலிருந்து உரம் தயாரித்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து அச்சிறுபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் விளக்கமாக எடுத்துரைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கருங்குழி பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் கசடு கழிவுநீர் மேலாண்மை திட்டத்தினையும் கன்னியாகுமரி மாவட்ட செயல் அலுவலர்கள் நேரடியாகச் சென்று கழிவறை பயன்படுத்துதல், கழிவறை நீரை வடிகட்டி விவசாயத்திற்கு பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment