TNPSC Recruitment 2019: TN Veterinary Assistant
Surgeon: கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவ பணிக்கு டி.என்.பி.எஸ்.சி
தேர்வுகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சை மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
நவம்பர் 13 ஆம் தேதி புதிய தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி,
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர்
பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு நவம்பர் 18 ஆம் தேதி முதல் டிசம்பர் 12 ஆம்
தேதி வரையில் நடைபெறும். உதவி அறுவை சிகிச்சை மருத்துவ பணிக்கான
எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெறும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Veterinary Assistant Surgeon பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு,
இடஒதுக்கீடு, தேர்வு பாடத்திட்டம், விண்ணப்பக்கட்டணம் உள்ளிட்ட முழு
விபரங்கள் விரைவில் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும்.
டி.என்.பி.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளம்
www.tnpsc.gov.in அல்லது tnpsc.exams.net, tnpsc.exams.in ஆகும்.
தற்சமயம் டி.என்.பி.எஸ்.சி.,யின் துணுக்கு செய்தி மட்டுமே
வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்
பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தொடர்ந்து
டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையளத்தை பார்வையிட்டு வருமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு கடந்த 2013 ஆம் ஆண்டு இதே போல், கால்நடை உதவி அறுவை
சிகிச்சை மருத்துவர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்தப்பட்டது.
அதே கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு பாடத்திட்டம் தான் இப்போதும்
இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட
டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கையை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.
No comments:
Post a Comment