செவிலிமேடு, அவ்வையார் நகர் பகுதியில், மழைநீர் செல்ல வழியில்லாமல் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள அவ்வையார் நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.அந்த பகுதியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கிறது. இதனால், கொசு அதிகரித்து வருகிறது.தண்ணீரில் நடந்துதான் வெளியில் செல்ல வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் கூறியதாவது:இந்த பகுதியில் ஏற்கனவே இருந்த மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, கடைகள், வீடுகள் கட்டி விட்டனர், மேலும் அவர்கள் அந்த இடத்தை மண் கொட்டி மேடாக்கி விட்டனர். இதனால் மழை காலத்தில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகிறது.
இந்த தண்ணீர் வற்றுவதற்கு பல மாதங்களாகும். அதுவரை குழந்தைகள், பெரியவர்கள் தண்ணீரில்தான் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது.தண்ணீர் செல்வதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment