செல்போனில் ஆபாச வீடியோவை காட்டியதுடன், அந்த வீடியோவை டவுன்லோடு
செய்து கொள்ளுங்கள் என்று மாணவிகளை வற்புறுத்திய பாதிரியார் & பள்ளி
தாளாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வருகிறது புனித மரியன்னை உயர்நிலை பள்ளி.4
00க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் தாளாளராக உள்ளவர்
பாதிரியார் மரிய ஆன்டனி தாஸ். 55 வயதாகிறது..
காமம் தலைக்கேறிய நபராக
இருந்திருக்கிறார் இவர். அந்த பள்ளியில் 9, 10-ம் வகுப்புக்கு பிள்ளைகளுக்கு இவர்தான் பாடம்
நடத்துவது வழக்கம். அப்படிதான் நேற்று முன்தினம் பாடம் நடத்தி உள்ளார்.
டவுன்லோடு
அதில் 5 மாணவிகளிடம் தன் செல்போனை தந்து, ஒரு புது ஆப் இருக்கு.. அதை
பாருங்க.. அது உங்களுக்கு பிடிச்சிருந்தா, வீட்டுக்கு எடுத்துட்டு போய்,
உங்க செல்போனிலும் டவுன்லோடு செய்து கொள்ளுங்க" என்று சொல்லி உள்ளார்.
இதனால் மாணவிகளும் ஆர்வத்துடன் அது என்ன என்று வாங்கி பார்த்தனர்.. அப்போது
அதில் ஆபாச படம் இருந்தது.
முற்றுகை
இதை பார்த்து அதிர்ந்து போன மாணவிகள், எதுவும் பேசாமல், அந்த செல்போனை
பாதிரியாரிடமே திருப்பி தந்துவிட்டனர். பின்னர் இதை பற்றி மாணவிகள் அவரவர்
வீட்டில் சென்று பெற்றோரிடம் சொல்லி உள்ளனர். இதைக் கேட்டு ஆத்திரமும்,
அதிர்ச்சியும், கோபமும் நிறைந்த பெற்றோர்கள், பள்ளி முன்பு திரண்டு
விட்டனர்.
புகார்
"படிக்கிற குழந்தைகளுக்கு எப்படி அவர் ஆபாச வீடியோ காட்டலாம், அவர் மீது
நடவடிக்கை எடுங்க" என்று முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினர். தகவல்
அறிந்த ரத்தினபுரி போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று
உறுதி சொன்னார்கள். பின்னர், இந்த சம்பவம் குறித்து கோவை மகளிர்
போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
ஆபாச படம்
இதன்பேரில் போலீசார், மாணவிகளுக்கு செல்போன் மூலம் ஆபாச படத்தை காட்டி,
பாலியல் உணர்வை தூண்டியதாக பாதிரியார் மரிய ஆன்டனி தாஸ் மீது போக்சோவில்
வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மாணவிகளுக்கு பாதிரியார் ஆபாச
படம் காட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment