வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இராமாபுரத்தில் குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் | Awareness Rally for Stoping Child Marrige in Ramapuram
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 14, 2019

இராமாபுரத்தில் குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் | Awareness Rally for Stoping Child Marrige in Ramapuram

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராமாபுரம் கிராமத்தில் நவம்பர்-14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு திறமை போட்டிகள் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடையே நடைபெற்றது.




மேலும், ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் (Rural Star Trust) மூலமாக பள்ளி மாணவர்கள் குழந்தைத் திருமணத் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொண்டனர். விழாவின் சிறப்பு விருந்தினரான யோராடோரா அறக்கட்டளையின் நிறுவனர்  திருமதி.ஷீஜா அவர்கள் ஊர்வலத்தினை கொடியசைத்து துவக்கினார். 


இந்த பிரச்சாரத்தில் குழந்தைத் திருமண தடுப்பு, குழந்தை பாதுகாப்பு, பெண் குழந்தை பாதுகாப்பு, குழந்தை வன்கொடுமை எதிர்ப்பு, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சம்மந்தப்பட்ட பதாகைகளை கையில் பிடித்து கோஷமிட்டபடி பள்ளி மாணவர்கள் ஊர்வலம் மேற்கொண்டனர். 

மேலும் இராமாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பேச்சுப்போட்டி மற்றும் இதர போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.  விழாவின் சிறப்பு விருந்தினரான திருமதி.ஷீஜா அவர்கள் விழாவினை சிறப்பித்தார்.


இந்த விழாவில் Rural Star Trust நிறுவனத்தன் இயக்குநர் திரு.அ.டோமினிக் அவர்கள் வரவேற்புரையுடன் வேலாமூர்  ஊராட்சி செயலர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான திரு.இர.துரைவேலு அவர்களின் முன்னிலையில் ஊர்வலம் மற்றும் விழாக்கூட்டம் நடைபெற்றது.
 

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் திரு.அருள், ரைஸ்மில் உரிமையாளர் திரு.K.ஐயப்பன், LIC முகவர் திரு.சுகுமார், Run World Media செய்தியளார்.திரு.பழனிவேல் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
 

மேலும், பள்ளி மாணவர்கள், சக ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் ஆசிரியை திருமதி.ஷீரிஜிதா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

 

No comments:

Post a Comment