இந்தியர்களின் அதீத மூளைக்கு எல்லையே கிடையாது. அதிலும் தகவல் தொழில்
நுட்ப துறையை பொறுத்த வரை அதற்கு ஈடு இணையே கிடையாது என்றே கூறலாம்.
ஏனெனில் இந்தியா மட்டும் அல்ல, பல நாடுகளிலும் ஐடி துறையில் பணி புரியும்
ஊழியர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.
அதை நீருப்பிக்கும் விதமாகவே ஹைதராபாத்தில் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் டேட்டா சயிண்டிஸ்ட் பணிக்கு,
7ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவனை தேர்வு செய்துள்ளனராம்.
ஹைத்ராபாத்தில் உள்ள ஸ்ரீசைத்தன்யா டெக்னோ பள்ளியில், 7ம் வகுப்பு
படிக்கும் மாணவன் தான் சித்தார்த் ஸ்ரீவாஸ்தவ் பில்லி. இவன் மோன்டைக்னே
ஸ்மார்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் டேட்டா சயிண்டிஸ்டாக
பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.
இது குறித்து மாணவன் சித்தார்த் கூறுகையில், எனக்கு 12 வயது தான் ஆகிறது.
நான் மோன்டைக்னே ஸ்மார்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் டேட்டா
சயிண்டிஸ்டாக பணி புரிகிறேன்.
மேலும் நான் ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியில்
படிக்கிறேன். செயற்கை நுண்ணறிவியல் குறித்த ஆர்வம் தான் என்னை டேட்டா
சயிண்டிஸ்டாக மாற உதவியது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு சிறுவயதிலிருந்தே கோடிங் எழுதுவதில் இருந்த ஆர்வத்தை அவரது
தந்தை புரிந்து கொண்டு உதவியதாகவும் கூறியுள்ளார்.
அதற்கு மிக்க நன்றி
என்று தனது தந்தைக்கும் நன்றி தெரிவித்துள்ள சித்தார்த், சிறு வயதிலேயே
வேலை பெற எனக்கு நிறைய உதவி செய்தவர். எனது அப்பா, எனக்கு கோடிங் குறித்து
பல பாடங்களை கற்றுக் கொடுத்தவர். இன்று எனக்கு சாத்தியமான அனைத்துக்கும்
எனது பெற்றோர் தான் காரணம் என்று தனது பெற்றோரை பெருமைப்படுத்தியுள்ளராம்.
மேலும் தனக்கு மிக உத்வேகமாய் ரோல்மாடாலாய் இருந்தவர் தன்மய் பஷி
என்றும் சித்தார்த் கூறியுள்ளராம். ஏனெனில் சிறு வயதிலேயே அவருக்கு
டெவலப்பராக கூகுளில் வேலை கிடைத்ததாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment