காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி இராமாபுரம். இந்த வங்கிகிளையில் இதே வட்டத்தினை சார்ந்த மாத்தூர் கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் என்பவர் பணம் எடுத்து வெளியே வந்துள்ளார்.
பணம் எடுத்து வெளியே வந்த ஆறுமுகம் வங்கியில் இருந்து எடுத்துவந்த ரூ.1,50,000/-னை தனது இருசக்கர வாகனத்தின் முன்புறம் பெட்ரோல் டேங்க் மேற்பகுதியில் உள்ள இருப்பில் வைத்துவிட்டு அவருக்கு தெரிந்த நபரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த நிலையில் இருசக்கர வாகனத்தின் முன்புறம் பெட்ரோல் டேங்க் மேற்பகுதியில் வைத்திருந்த பணத்தை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்றதாக அறியப்படுகிறது.
மேற்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த மேல்மருவத்தூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.ரவி என்பவர் சம்மந்தப்பட்ட வங்கியில் CCTV காட்சிகளை ஆராய்ந்து பார்த்தார். மேலும் சம்பவ இடத்திற்கு காவல் ஆய்வாளர்(பொறுப்பு) அவர்களும் நேரில் வந்து பணம் பறிகொடுத்த நபரிடம் விசாரணை மேற்கொண்டார்.
பட்டப்பகலில் வங்கியின் முன்னரே இப்படிப்பட்ட சம்பவம் நேரிட்டது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த இடத்தில் கொள்ளை சம்பவம் நடந்த நேரத்தில் பணம் பறிகொடுத்த நபர் யாரிடம் பேசிக் கொண்டிருந்தார் என்பதையும், எதற்காக பணத்தினை அவ்வளவு அலட்சியமாக வைத்தார் என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் காவல்துறையினரின் முழு விசாரணைக்கு பிறகே குற்றவாளியை பிடிப்பதில் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment