வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெட்ரோல் பங்க்கில் உங்கள் பணம் வீணாகாமல் இருக்க இதுதான் வழி... இனி டெய்லியும் இத ட்ரை பண்ணுங்க | How to reduce Cost when Petrol Filling
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 14, 2019

பெட்ரோல் பங்க்கில் உங்கள் பணம் வீணாகாமல் இருக்க இதுதான் வழி... இனி டெய்லியும் இத ட்ரை பண்ணுங்க | How to reduce Cost when Petrol Filling

இன்றைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. எனவே கார் அதிக மைலேஜ் கொடுக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். இதற்காக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மற்றும் நிரூபிக்கப்படாத பல்வேறு வழிமுறைகளை கார் உரிமையாளர்கள் பின்பற்றுகின்றனர்.


உண்மையில் உங்கள் காரில் இருந்து அதிக மைலேஜை பெறுவது மிகவும் எளிமையானதுதான். ஒரு சில சிறிய விஷயங்களை நீங்கள் சரியாக பின்பற்றினாலே உங்கள் காரில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் மைலேஜை எளிதாக பெற்று விட முடியும். உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.


ஐடிலிங்: 
காரை நீண்ட நேரம் ஐடிலிங்கில் (IDLING) விடுவதை இன்றோடு விட்டு விடுங்கள். கார் நீண்ட நேரத்திற்கு ஐடிலிங்கில் இருந்தால், உண்மையில் நீங்கள் எங்கும் போகாமலேயே வீணாக எரிபொருளை இழந்து கொண்டிருப்பீர்கள். 10 வினாடிகளுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், இன்ஜினை உடனடியாக ஆஃப் செய்து விடுங்கள்.


காரை ஸ்டார்ட் செய்யும் முன்பு முழுமையாக தயாராகி விடுங்கள்: 
நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பொதுவாக நாம் காரை ஸ்டார்ட் செய்த பிறகுதான் சீட் பெல்ட் அணிவது, மிரர்களை அட்ஜெஸ்ட் செய்வது போன்ற வேலைகளை எல்லாம் செய்வோம். ஆனால் இவற்றை காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பே செய்து விடுவது நல்லது. இதன் மூலமாக ஓரிரு நிமிடங்கள் கார் ஐடிலிங்கில் இருப்பது தவிர்க்கப்படும். எரிபொருளும் மிச்சமாகும்.


சீரான வேகம்: 
கூடுமானவரை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரத்திற்கு சீரான வேகத்தில் காரை ஓட்ட முயலுங்கள். திடீரென ஆக்ஸலரேட்டரை மிதிப்பது பின்னர் உடனடியாக குறைப்பதன் காரணமாக அதிக எரிபொருள் செலவாகும். எனவே சீரான வேகத்தில் நீங்கள் காரை செலுத்தினால், அதிக மைலேஜ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.


எந்த வேகம் உகந்தது: 
மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டருக்கு இடைப்பட்ட வேகத்தில் பயணம் செய்யும்போதுதான் பெரும்பாலான கார்கள் எரிபொருள் சிக்கனத்தில் சிறந்து விளங்குகின்றன. எனவே கூடுமானவரை இதற்கு மிகாமலும், இதற்கு குறையாமலும் காரை ஓட்டுங்கள். மணிக்கு 80-90 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டினால், மைலேஜ் கடுமையாக குறைந்து விடும்.


சரியான டயர் பிரஷர்:  
உங்கள் கார் வழங்கும் மைலேஜில் டயர்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட டயர் பிரஷை நீங்கள் பராமரிப்பது அவசியம். இதன் மூலமாக மட்டும் உங்கள் காரின் மைலேஜை 3 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என்றால் பார்த்து கொள்ளுங்கள். மேலும் இதன் மூலமாக பாதுகாப்பு மற்றும் டயர்களினுடைய ஆயுட்காலமும் அதிகரிக்கும்.


கிளட்சை அதிகம் உபயோகிக்காதீர்கள்:  
கிளட்ச் பெடலை பயன்படுத்தாமல் கியர்களை மாற்றுங்கள் என நாங்கள் கூறவில்லை. தேவையில்லாமல் கிளட்ச் பெடலை பயன்படுத்த வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். ஒரு சிலர் கிளட்ச் பெடல் மீது காலை வைத்து கொண்டே காரை ஓட்டுவார்கள். இது தவறு. தேவைப்படும் நேரங்களை தவிர கிளட்ச் பெடல் மீது காலை வைக்காதீர்கள். எரிபொருள் சிக்கனத்திற்கு இது உதவும்.


தேவையில்லாத பொருட்களை தவிர்த்து விடுங்கள்
எரிபொருள் சிக்கனம் என வந்து விட்டால், எடைதான் முக்கியமான எதிரி. ஆனால் ஒரு லிட்டருக்கு கூடுதலாக 1 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என்பதற்காக காரில் இருப்பவர்களை கீழே இறங்க சொல்ல முடியாது. எனினும் காரில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றலாம். உங்கள் காரின் பூட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை கண்டறிந்து அகற்றி விடுங்கள்.

பிளான் பண்ணி பண்ணுங்க: 
 ஒரு இடத்திற்கு செல்லும் முன்பாக வழித்தடத்தை கவனமாக தேர்வு செய்யுங்கள். வழித்தடத்தை முன்பே திட்டமிட்டு கொள்வதன் மூலம் நீங்கள் வேறு இடத்திற்கு செல்வது தவிர்க்கப்படும். அதேபோல் எங்கு செல்வதாக இருந்தாலும் கொஞ்சம் முன் கூட்டியே புறப்படுங்கள். நீங்கள் அவ்வாறு கிளம்பிவிட்டால் நிதானமாக இருப்பீர்கள். இதன்மூலம் ஆக்ஸலரேட்டரை தாறுமாறாக மிதிப்பது தவிர்க்கப்படும்.


சர்வீஸ் முக்கியம்: 
கார் என்பது ஒரு இயந்திரம்தான். எனவே அதனை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சரியாக சர்வீஸ் செய்ய வேண்டும். அதேபோல் சரியான தரநிலை கொண்ட இன்ஜின் ஆயுளை பயன்படுத்துங்கள். இவற்றை எல்லாம் நீங்கள் செய்தால், பெட்ரோல் பங்க்கில் உங்கள் பணம் வீணாக செலவு ஆவதை கணிசமாக குறைக்க முடியும்.


பெட்ரோல், டீசலுக்காக ஆகும் செலவை குறைக்க மற்றொரு வழியும் உள்ளது. எலெக்ட்ரிக் கார்கள்தான் அந்த வழி. பெட்ரோல், டீசல் கார்களை காட்டிலும் எலெக்ட்ரிக் கார்களை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவுதான். தற்போது மத்திய அரசு வழங்கி வரும் ஊக்கம் காரணமாக இந்தியாவில் ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக தொடங்கியுள்ளன.


இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டிகோர் எலெக்ட்ரிக் காரை தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் வணிக ரீதியில் உபயோகிக்கும் வகையிலும், தனிப்பட்ட முறையில் உபயோகிக்கும் வகையிலும் கிடைக்கும் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்களை இனி பார்க்கலாம்.


டாடா டிகோரின் ஆரம்ப விலையாக ரூ.9.44 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்திடம் இருந்து எலெக்ட்ரிக் கார்களுக்கென சலுகைகள் அறிவிக்கப்பட்டால் இந்த விலை குறையவும் வாய்ப்புள்ளதாம்.


டிகோர் எலெக்ட்ரிக் காரை முதலில் அரசாங்க மற்றும் கப்பற்படை வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கி வந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்த காரை மற்ற வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.


மூன்று வேரியண்ட்கள் 
எக்ஸ்இ+, எக்ஸ்எம்+ மற்றும் எக்ஸ்டி+ என மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ள இந்த டிகோர் எலெக்ட்ரிக் கார், நீண்ட தூர பயணம், குறைந்தளவு முன்பணம் மற்றும் முற்றிலுமாக மாசு உமிழ்வை ஏற்படுத்தாது போன்ற சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது.

ஒரே சார்ஜ்ஜில் 213 கிலோமீட்டர் 
பெரிய அளவில், 21.5 கிலோ வோல்ட் பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரானது, ஒருமுறை சார்ஜ் செய்தாலே சுமார் 213 கிலோமீட்டர் செல்லும் வலிமை வாய்ந்தது. இதற்கு அராய் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் டிரைவ் மற்றும் ஸ்போர்ட் என்ற இரு டிரைவிங் அமைப்புகளை கொண்டுள்ளது.


பேட்டரி கூலிங் சிஸ்டம் 
காரை வெப்பம் மிகுதியான இடத்தில் ஓட்டினாலும் காரில் இருக்கும் பேட்டரி கூலிங் அமைப்பு பேட்டரியை குளிர்ச்சியாக்கிவிடும் என கூறியுள்ளது டாடா நிறுவனம். இதன் பேட்டரியை நிலையான சார்ஜிங் மற்றும் வேகமான சார்ஜிங் என இரு விதங்களில் சார்ஜ் செய்ய முடியும்.


மாசற்ற இந்தியா 
டிகோர் இவி எலெக்ட்ரிக் கார் குறித்து டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன முதன்மை அதிகாரி ஆஷேஷ் தார் கூறுகையில், டிகோர் எலெக்ட்ரிக் மாடல், எங்களது வாடிக்கையாளர்களுக்கு நீண்ட தூரம் செல்ல கூடிய வாகனமாகவும், அதேநேரம் அதிக வருவாயை தரும் வாகனமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட மாடல் கார். டிகோர் மாடலின் இந்த புது வெர்சன், ஏற்கனவே அரசாங்க வாடிக்கையாளர்களுக்கும் கடற்படையை சேர்ந்தவர்களுக்கும் விற்கப்பட்டு வந்துள்ளது. இந்தியாவில் அடிக்கடி பழுதடையாமல் நிலையான கார் இயக்கத்திற்கு எங்களது இந்த தயாரிப்பு வலுவூட்டும் என்றார்.


3 வருடத்தில் 1.25 லட்ச கிமீ 
டாடா நிறுவனம் டிகோர் இவியின் அனைத்து வேரியண்ட்களுக்கும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்கியுள்ளது. ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, சீட் பெல்ட்டை நினைவூட்டும் மற்றும் அதிக வேகத்தில் செல்லும் போது எச்சரிக்கும் வசதி, பின்புற பார்கிங் சென்சார் என பல அம்சங்கள் இந்த எலெக்ட்ரிக் காரில் உள்ளன. இந்த காரை நிச்சயம் 3 வருடத்தில் 1.25 லட்ச கிலோமீட்டர் தூரம் ஓட்டி செல்ல முடியும் எனவும் கூறுகின்றனர்.


இறுதியில், இந்திய மார்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டது. இந்த காரின் சிறப்பம்சங்களில் முக்கியமானது, ஒரே ஒருமுறை சார்ஜ் செய்தாலே 213 கிலோ மீட்டர் பயணம் செல்லலாம் என்பதுதான். இந்த காருக்கான முன்பதிவு இந்தியா முழுவதும் உள்ள டாடா நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் ஆரம்பமாகிவிட்டது. இதனால் இந்த எலக்ட்ரிக் காரின் விநியோகம் மிக விரைவில் இருக்கும்.

No comments:

Post a Comment