காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் கிராமத்தில் நேற்று (02.10.2019) அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தினை கிராம பொதுமக்கள் புறக்கணிக்க நேரிட்டனர்.
ஆனைக்குன்னம் கிராமத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியினை மூடக்கோரி பொதுமக்கள் சார்பில் பல்வேறுகட்ட போராட்டங்களும், கிராம சபை கூட்டங்கள் புறக்கணிப்பும் கடந்த 1 ஆண்டு காலமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி 2019 (16.09.2019) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கல்குவாரியினை மூடக்கோரி ஆனைக்குன்னம் கிராம பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டது என்னவெனில் "ஆனைக்குன்னம் கிராமத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியினை அரசு தலையிட்டு உடனடியாக மூட வேண்டும். இல்லையெனில் வரும் 02.10.2019 அன்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை அடையாள அட்டைகளான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவை அரசாங்கத்திடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்பதே"
இதனையடுத்து நேற்று (02.10.2019) நடைபெற்ற காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டத்தினை புறக்கணித்து அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் கிராம சபை கூட்டத்திற்கு வருகை புரிந்த அரசு அதிகாரிகள் யாரும் அடையாள அட்டைகளை திரும்ப பெறாத நிலையில் துணை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானபடுத்தி வாக்குறுதி அளித்தார். ஆனால் அடையாள அட்டைகளை வாங்க மறுத்துவிட்டார்.
மேற்படி வாக்குறுதியில் வருகின்ற (04.10.2019) அன்று மதுராந்தகம் வட்டாட்சியர் முன்னிலையில் கிராம மக்கள் மற்றும் கல்குவாரியினை சார்ந்த நபர்களிடம் ஆலோசனை நடத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட ஆனைக்குன்னம் கிராம பொதுமக்கள் கிராம சபை கூட்டத்திற்கு இடையூறு இல்லாமல் அமைதி காத்தனர்.
நாளை (04.10.2019) அன்று வட்டாட்சியர் நடத்தும் ஆலோசனை யாருக்கு சாதகமாக அமையும் என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.
ஆனைக்குன்னம் கிராம கல்குவாரி சம்மந்தமான பிற செய்திகள் :
16/09/2019 : ஆனைக்குன்னம் கிராமத்தில் குவாரிக்கு எதிரான போராட்டம் தீவிரம் | பொதுமக்கள் தங்களது அடையாள அட்டைகளை அரசாங்கத்திடமே ஒப்படைக்க முடிவு | Anaikunnam Quarrying of Stone Problem ahead
10/09/2019 : ஆனைக்குன்னம் கிராமத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியை எதிர்த்து அடுத்தகட்ட நடவடிக்கை | The Next Step to oppose the Quarrying of Stone at Anaikunnam Village
17/08/2019 : ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் | Anaikunnam stone Quarry issue

No comments:
Post a Comment