காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், லா.எண்டத்தூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமும், 17 பேர் படுகாயமும் அடைந்தனர்.
திண்டிவனத்திலிருந்து உத்திரமேரூர், மதுராந்தகம் வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்ற இந்த தனியார் பேருந்தானது இன்று மாலை 03.10 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாடு இழந்ததால் விபத்தில் சிக்கியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. விபத்தில் லேசான காயமடைந்தவர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவமனையிலும், படுகாயம் அடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில் படுகாயமடைந்த விஜி என்பவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்த மேல்மருவத்துர் காவல் உதவி ஆய்வாளர் திரு.அன்பு அவர்கள் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

No comments:
Post a Comment