கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தில், சிறிய அளவிலான நுாலகத்தை அமைத்து,
அதில் பல வகையான புத்தகங்கள் வைத்திருப்பது பயன் அளிப்பதாக உள்ளது என,
ஊழியர்கள் கூறுகின்றனர்.மதுராந்தகம் ஒன்றியத்திறகு உட்பட்டது, கருங்குழி
பேரூராட்சி.
இப்பேரூராட்சி அலுவலகத்தில், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக அனைத்து பணியாளர்களுக்குமான சிறிய அளவிலான நுாலகம் ஒன்று, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நுாலகத்தில், திடக்கிழவு மேலாண்மை உள்ளிட்ட, அரசு திட்டங்கள் சார்ந்த பல புத்தகங்களும், அரசியல் அமைப்பு மற்றும் மூலிகை செடி வகைகள் புத்தகங்கள் உள்ளன.மேலும், மண் வகைகளின் தன்மைகள், பிளாஸ்டிக் விளைவுகள், பூமி வெப்பமாதல் உள்ளிட்ட, விளக்கங்கள் தரும், பல வகையான புத்தகங்களும் உள்ளன.
அலுவலகத்தில், மதிய உணவு இடைவெளி உள்ளிட்ட நேரங்களில், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், இப்புத்தகங்களை படிக்கின்றனர்.இந்த நுாலகத்தில் உள்ள புத்தகங்கள் மூலம், பல்வேறு தகவல்களை அறிந்து, விழிப்புணர்வுபெற வசதியாக உள்ளதாக அலுவலக பணியாளர்கள் பெருமையோடு கூறுகின்றனர்.

No comments:
Post a Comment