வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்யபிரியா உரையாடல் | சட்டங்கள் தெரிந்தால் குற்றங்கள் குறையும் | Kancheepuram Teachers Meeting with DIG Sathiyapriya | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, September 18, 2019

ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்யபிரியா உரையாடல் | சட்டங்கள் தெரிந்தால் குற்றங்கள் குறையும் | Kancheepuram Teachers Meeting with DIG Sathiyapriya | Run World Media

''மாணவர்கள், படிக்கும்போதே, சட்டங்களையும், நல்ல பழக்கங்களையும் கற்றுகொண்டால், வரும் காலத்தில் குற்றங்கள் குறையும்'' என, ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்யபிரியா பேசினார். 
 


காஞ்சிபுரத்தில், மாணவர் காவலர் படை, கடந்தாண்டு துவங்கப்பட்டது. இப்படை குறித்தும், இதில், ஆசிரியர்களின் பங்கு குறித்தும் அறிய, ஆலோசனை கூட்டத்திற்கு, ஏற்பாடு செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில், போலீஸ் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற, போலீஸ் பயிற்சி, டி.ஐ.ஜி., சத்யபிரியா பேசியதாவது:'மாணவர் காவலர் படை' முதலில், கேரளாவில் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் ஏற்படுத்த முடிவானது. தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 
 
பின், பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.இதற்காக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8, 9ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியர், இந்த மாணவர் படையில் சேர்க்கப்படுவர். ஒரு பள்ளியில் இருந்து, 44 பேர் தேர்வாவர்.மாணவர்களுக்கு பயிற்சி வழங்க, பள்ளிக்கு இரு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 210 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு, செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் பள்ளியில், இன்று நடக்கிறது.மாணவர்கள் படிக்கும்போதே, நல்ல பழக்கங்களையும், சட்டங்களையும் தெரிந்து கொண்டால், எதிர்காலத்தில் குற்றங்கள் குறையும். இதற்காகவே, இந்த மாணவர் படை.பணி ஓய்வுக்கு பின், நிம்மதியாக உறங்க வேண்டுமானால், போலீசார், பயமின்றி, நேர்மையுடன் பணிபுரிய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment