வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் குறைப்பு | Driving Licence Renewal Extension Date is reduced
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, September 25, 2019

டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் குறைப்பு | Driving Licence Renewal Extension Date is reduced

தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

  
தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கத் தவறினால் அதைப் புதுப்பிக்க 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

அது தற்போது ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு ஆண்டு தவறினால் மீண்டும் முதலில் இருந்து டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்
  
இந்த புதிய நடைமறை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. எனவே டிரைவிங் லைசென்ஸ் காலாவதி தேதியை கவனிக்காதவர்கள் உரிய காலத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க முன்பு 5 ஆண்டுகள் வரை வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
  

No comments:

Post a Comment