வயிறு வலிக்காக ஆஸ்பத்திரிக்கு போன 17 வயது மாணவிக்கு பெண் குழந்தை
பிறந்துவிட்டது அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த கர்ப்பத்திற்கு காரணம் 17
வயது சிறுவன் என்பது இன்னொரு அதிர்ச்சி!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி ஒருத்தி வயிற்று
வலி சிகிச்சைக்காக வந்திருந்தாள். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்தபோது, அது
வயிறு வலி இல்லை, பிரசவ வலி என்பது தெரியவந்தது.
இதையடுத்து நடந்த சிகிச்சையை அடுத்து, சிறுமிக்கு பெண் குழந்தை
பிறந்தது. இது குறித்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள்
ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான்
விஷயம் வெளிப்பட்டது.
சிறுமி 11ம் வகுப்பு படிக்கும் போது, கூட படிக்கும் மாணவனுடன் பழக்கம்
ஏற்பட்டுள்ளது. 2 பேரும் காதலித்து உள்ளனர். ஆனால் அந்த மாணவன், 12-ம்
வகுப்பு படிக்கும்போதே பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு, பிரைவேட்
காட்டன் மில்லுக்கு வேலைக்கு போய்விட்டான். இவர்களுக்குள் ஏற்பட்ட
பழக்கத்தில் கர்ப்பம் அடைந்து இருக்கிறாள் மாணவி. ஆனால் இதை பற்றி வீட்டில்
யாரிடமும் சொல்லவில்லை.
வழக்கம்போல் ஸ்கூலுக்கும் போய் வந்திருக்கிறாள். திடீரென வயிற்று வலி
ஏற்படவும்தான் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இந்த
விவரங்களை உறுதி செய்த போலீசார், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 17
வயது சிறுவனை கைது செய்து பல்லடம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும்
அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, சிறுமியால், குழந்தையை பாதுகாக்க முடியாது
என்ற காரணத்தினால், பெண் குழந்தையை காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
சிறுமிக்கு உரிய வயது வந்த பின்னர் இந்த குழந்தை அவளிடமே
ஒப்படைக்கப்படும். 17 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம்
திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment