விசா இல்லாமக் கூட பக்கத்து நாடான இலங்கைக்கு போய்ட்டு வரமுடியுது.
ஆனா பெர்மிட் இல்லாம காஷ்மீர் போகமுடியாது. அதனால இந்த காஷ்மீர் இணைப்பு
ரொம்ப அவசியம்னு நடிகை கஸ்தூரி சொல்லி இருக்காங்க.
காஷ்மீரில் மண்ணின் மைந்தர்கள் தவிர அந்நியர்களுக்கு அனுமதியில்லாமல்
இருந்தது. இப்போது இந்த இணைப்பின் மூலம் இந்திய மக்கள் அனைவரும் சமம்
என்றாகிவிட்டது.
370 சட்டப்பிரிவை நீக்கப்பட்டதால் காஷ்மீருக்கான தனி
அந்தஸ்து நீக்கப்பட்டதால் இந்திய சட்டம் காஷ்மீருக்கும் செல்லும்.
70 வருடமாக கனன்றுகொண்டிருந்த அந்த கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டனர். ஷாமபிரசாத் முகர்ஜி காஷ்மீரில்
சிறையில் உயிர் நீத்தவர். அவர்தான் ஒருநாள் இந்தியா ஒருமை அடையும்
அப்படின்னு சொன்னார் அவரது கனவு நிறைவேறி விட்டது.
ஒரே இந்தியா என்றாகி காஷ்மீரும் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டது. இது
முஸ்லீம்களுக்கு எதிரான நிகழ்வு அல்ல. 70 வருடமாக இருந்த தடை
உடைக்கப்பட்டுவிட்டது அப்படின்னும் கஸ்தூரி சொல்லியிருக்காங்க.
கஸ்தூரி
1990ஆவது ஆண்டுகள்ல தமிழ் சினிமாவுல முன்னணி கதாநாயகியா இருந்தவங்க நம்ம
நடிகை கஸ்தூரி. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சிறந்த படிப்பாளி. கூடவே,
வக்கீலுக்கு படிச்சவங்க. அதனாலதானோ என்னவோ, நெறைய விஷய ஞானம் உள்ளவங்க. உலக
நடப்புகளை ஃபிங்கர் டிப்ஸுல வச்சிருக்குறவங்க.
உலக ஞானமுள்ள நடிகை
நெறய க்வீஸ் ப்ரொக்ராம்ல கலந்துக்கிட்டு ஜெயிச்சவங்க. உலக நடப்புகளைப்
பத்தி என்ன கேட்டாலும் டக்கு டக்குன்னு பதில் சொல்லுவாங்க. அந்த அளவுக்கு
அதி புத்திசாலியும் கூட. மத்த நடிகைங்க மாதிரி இல்லாம, ஐநூறு வருஷத்துக்கு
முந்தின விஷயத்துல இருந்து இன்னிக்கு நாட்டு நடப்பு ஒலக நடப்புன்னு
எல்லாத்தையுமே கரச்சி குடிச்சவங்க. இன்னிக்கு நீங்க எந்த மேட்டரப் பத்தி
நம்ம கஸ்தூரிகிட்ட கேட்டக் கூட நல்லா தீர்க்கமா சிந்திச்சி ஒடனே பதில்
சொல்ற அளவுக்கு எல்லாம் தெரிஞ்சவங்க.
சோசியல் மீடியா போராளி
அதனால தான், எங்க என்ன நல்லது கெட்டது நடந்தாலும் கூட, ஒடனே, தன்னோட கருத்த
டக்குன்னு சோசியல் மீடியாவுல சொல்லிடுவாங்க. சோசியல் மீடியாவுக்கும்
மென்னு திங்கிறதுக்கு அவல் கெடச்சதுன்னு, ஒடனே அவங்கள வச்சி செய்வாங்க. ஆனா
நம்ம கஸ்தூரியோ, அவங்க சொன்னதுனால பின்னாடி என்ன எதிர்ப்போ அல்லது ஆதரவோ,
கேலி கிண்டலோ எது வந்தாலும் அதப் பத்தி கண்டுக்காம தன்னோட வேலைய
பாக்குறதுக்கு போயிடுவாங்க.
காஷ்மீர் பிரச்சினை
இப்ப பாருங்க, காஷ்மீர் பிரச்சனையால பார்லிமெண்ட்டே ரெண்டு பட்டு கெடக்கு.
நம்ம கஸ்தூரியோ வழக்கம் போல, அல்லாத்தையும் முந்திக்கொண்டு தன்னோட கருத்த
சொல்லியிருக்காங்க. ஜம்மு-காஷ்மீர் ஸ்டேட்டும் மத்த ஸ்டேட்டுகள போலவே நம்ம
நாட்டோட அங்கம் தான்னு சொல்லியிருக்காங்க. அதனால அந்த ஆர்டிகில் 370ங்குற
சட்டப் பிரிவ தூக்குனது ரொம்ப சரி அப்பிடிங்கறாங்க.
காஷ்மீர் ஒன்றானதே
முக்கியமா அவங்க என்ன சொல்றாங்கன்னா, இப்ப நம்ம பக்கத்து நாடான சிலோனுக்கு
போகணும்னா கூட விசாவே தேவையில்ல. அதுவே பாருங்க, நம்ம நாட்டுக்குள்ளாற
இருக்குற ஒரு ஸ்டேட்டுக்குள்ளாற போறதுக்கு மொதல்லயே பெர்மிஷன் வாங்கணுமாம்.
இதென்னங்க அநியாயமா இருக்குது. இப்போ காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை
நீக்கியதாலே ஒரே இந்தியாவாக மாறிவிட்டது.
காஷ்மீரில் முதலீடு
அது மட்டுமாங்க, மத்த ஸ்டேட்டுல இருக்குறவங்க துட்ட கொண்டுட்டு போயி
காஷ்மீர்ல இன்வெஸ்ட் பண்ணலாமம். ஆனா, அங்க இருந்து நம்ம போட்ட
இன்வெஸ்ட்மென்ட்ட வெளில எடுத்துட்டு வரமுடியாதாம். ஏங்க நாம என்ன சும்ம
வச்சிட்டு இருக்குற துட்டயா எடுத்துட்டு போயி காஷ்மீர்ல கொட்றோம்.
இன்னோன்னும் முக்கியமா சொல்லணும்.
சொத்து வாங்க முடியாது
காஷ்மீர்ல இருக்குறவங்க இந்தியாவுல எங்க வேணும்னாலும் சொத்து வாங்கலாம்.
ஆனா காஷ்மீர்ல இருந்து ஒரு செங்கல்ல கூட வெளில யாரும் கொண்டுட்டு வர
முடியாதாம். ஆனா அங்க இருக்குற ஹவுஸ் போட் (House Boat) மட்டும்
வாங்கிக்கலாமாம். அத வாங்கி நம்ம என்ன தலையிலய வச்சிக்க முடியும். அப்புறம்
எதுக்குங்க இந்தியாவுல இருக்குற அனைவரும் சமம். இனிமே சொத்து வாங்கலாம்.
காஷ்மீருக்கு தனியா அந்தஸ்து கொடுக்குற அந்த சட்டப்பிரிவு 370ங்குற
சட்டப்பிரிவை நீக்கியது தப்பே இல்லீங்க. எனக்கு ரொம்ப சந்தோசம்னு சொல்றாங்க
கஸ்தூரி.
No comments:
Post a Comment