கணவனை பிரிந்து பிரியாவால் வாழவே முடியவில்லை.. அதனால் அவரை அடக்கம்
செய்த இடத்துக்கு பக்கத்திலேயே உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்ட
சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையத்தை சேர்ந்த தம்பதி
முத்துச்செல்வன் - பிரியா. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 8 வருடம் ஆகிறது. 7
வயது, 4 வயது மற்றும் 2 வயது என்று மொத்தம் 3 மகன்கள் இந்த தம்பதிக்கு
உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஸ் மோதி முத்துச்செல்வன்
இறந்துவிட்டார். கணவன் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தவர் பிரியா.
அவர் இறந்ததில் இருந்தே நிலைகுலைந்து போயிருந்தார். 28 வயதான பிரியா,கூலி
வேலைக்கு சென்று, தன்னுடைய 3 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார்.
ஆனாலும் எவ்வளவு உழைத்தாலும் வருமானம் போதவில்லை. இருப்பினும்
அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. ஒரு பக்கம் கணவனின் நினைவு,
மற்றொரு பக்கம் வறுமை என்று துவண்டு போய்விட்டார். அழுது அழுது உயிர்
வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவெடுத்த பிரியா, நேற்று முன்தினம் 3
குழந்தைகளையும் வீட்டிலேயே விட்டுவிட்டு, வெளியே கிளம்பினார்.
எம்.ஆர்.பாளையம் உப்பாற்றங்கரையில்தான் முத்துச்செல்வனை அடக்கம்
செய்தனர். அதனால் மயானத்துக்கே சென்ற பிரியா, கணவர் அடக்கம் செய்த இடத்தில்
நின்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்
. இதில்
உடலெல்லாம் கருகி அங்கேயே விழுந்து இறந்தார் பிரியா.
தகவலறிந்து விரைந்து சென்ற சிறுகனூர் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை
நடத்தி வருகிறார்கள். தாயும் இல்லாமல், தந்தையும் இல்லாமல் 3 பிஞ்சுகளும்
அழுதது ஊர் மக்களை கலங்க வைத்து.
No comments:
Post a Comment