லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை சிறுமி ஒருவர் காப்பாற்றி பாராட்டை பெற்று உள்ளார்.
குடியிருப்பில் 3 சிறுவர்கள் லிப்ட்டில் ஏறுகிறார்கள். அப்போது லிப்ட் நகர்ந்ததும் லிப்ட் கதவில் மாட்டிய கயிறு ஐந்து வயது சிறுவன் கழுத்தில் மாட்டி மேலே தூக்கப்பட்டான். உடனடியாக சிறுவனின் சகோதரி வேகமாக செயல்பட்டு சிறுவனின் கழுத்தில் மாட்டிய கயிறை அகற்றினார். இதனால் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். இந்த சம்பவம் துருக்கியின் இஸ்தான்புல்லில் கடந்த புதன்கிழமை நடந்ததாக தி மிரர் தெரிவித்துள்ளது.

இந்த கடினமான நேரத்தில் சகோதரி நிதானமாக நிலைமையை கையாண்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
''அந்த
பெண் மிக முக்கியமான சூழ்நிலையில் மிக விரைவாக கையாண்டார்'' என்று
வீடியோவுக்கு பதிலளித்த ஒருவர் கூறி உள்ளார். பதட்டமில்லாமல் நிலமையை
கையாண்டது மிகவும் நல்லது என மற்றொருவர் கூறி உள்ளார்.
உள்ளூர் தகவல்களின்படி, சிறுவன் உடல்நிலை தற்போது சரியில்லாமல் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment