வாகனம் இல்லையென்றாலும் அதற்கான பேன்சி எண்ணை முன்கூட்டியே வாங்கும் வகையிலான புதிய அறிவிப்பை ஆர்டிஓ அலுவலகம் வெளியிட்டுள்ளது
ஒரு வாகனம் சாலையில் இயங்க எந்த அளவிற்கு எரிபொருள் தேவையோ... அதே
அளவிற்கு, அதனை சாலையில் பயன்பாட்டிற்கு கொண்டுவர பதிவெண் முக்கியமாக
இருக்கின்றது. இது ஒவ்வொரு வாகனத்திலும் தனித் தன்மை வாய்ந்ததாக இருக்கும்
என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
அந்தவகையில் இந்தியாவில் இயங்கும் ஒவ்வொரு மோட்டார் வாகனங்களுக்கும்,
அவற்றை எளிதில் அடையாளம் காணும் வகையில் நம்பர் பிளேட் வழங்கப்படுகின்றது.
இந்த பணியினை அந்தந்த மாநிலத்தில் உள்ள வட்டார போக்குவரத்து (ஆர்டிஓ)
அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மோட்டார் வாகனங்களுக்கு பதிவெண் வழங்க பல்வேறு காரணங்கள் உள்ளன.
ஆனால், மிக முக்கியமாக வாகனங்களை இனங்காண்பதில் உள்ள சிக்கல்களை குறைக்கவே
இந்த முறை கையாளப்பட்டு வருகின்றது.
இந்த எண்கள் அசாதாரமானதாக காணப்படலாம். அவை பல்வேறு நுணுக்கங்களைப்
பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், அந்தந்த மாநிலத்தை
குறிக்கும் வகையில் முதல் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.
உதாரணமாக, தமிழகத்திற்கு TN என்றும் கேரளாவிற்கு KL எனவும்
வழங்கப்படுகின்றது.
இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட ஆர்டிஓ-வின் அலுவலக எண் கொடுக்கப்படும்.
எடுத்துக்காட்டாக TN 01, TN 05 இம்மாதிரியான எண் இடம்பெறும். இதையடுத்தே
வாகனத்திற்கான பிரத்யேக பதிவெண் ஆங்கில எழுத்துகளை (A,B,C,D) அடுத்து
நம்பரில் வழங்கப்படும். உதாரணாக, TN 01 AA 1111 என வழங்கப்படும்.
இவ்வாறு நாட்டில் இயங்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் பிரத்யேகமாக, அதை
இனம் கண்டறியும் வகையில் பதிவெண்கள் வழங்கப்படுகின்றது. இது, வாகனம்
சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவம், வாகன திருட்டு, முறைகேடு உள்ளிட்ட
பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய இது உதவும்.
அதேசமயம், பலர் தங்களது வாகனங்களை, எளிதில் மறக்கமுடியாத மற்றும் கண்ட
உடன் கண்களை கவரும் வகையிலான பேன்சி எண்களால் அலங்கரிக்க
விரும்புகின்றனர்.
இந்த கலாச்சாரம் அண்மைக் காலங்களாக அதிகரித்து வண்ணம் உள்ளது. ஆகையால்
பேன்சி எண்மீதான மோகத்தைத் தீர்க்கும் வகையில், ஆன்லைனில் பேன்சி எண்களை
விற்பனைச் செய்ய ஆர்டிஓ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால், இது நம்
தமிழகத்தில் இல்லை எண்பதுதான் வேதனையளிக்கும் உரியது.
பிஹார் மாநிலத்தின் போக்குவரத்துத்துறைதான் இத்தகைய நடவடிக்கை
மேற்கொள்ள உள்ளது. இந்த நடவடிக்கையினால், பேன்சி எண் ஆர்வலர்கள் ஏலம்
எடுக்க ஆர்டிஓ அலவலகங்களை நாட வேண்டும் என்ற சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது.
பேன்சி எண்ணிற்கான விற்பனை இனி ஆன்லைனில் விட இருப்பதாக அம்மாநில
போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பாணையைதான் பிஹார் போக்குவரத்துத்துறை நேற்று
(வியாழக்கிழமை) வெளியிட்டது.
இந்த ஏலமானது, ரூ. 10 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 1 லட்சம் வரை விடப்பட உள்ளது.
இதற்கான கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆர்டிஓ அலுவலகம் என எங்குவேண்டுமானாலும்
கட்டிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு ஆடம்பரமான எண்களை ஒதுக்குவதற்கான புதிய முறைக்கு
அம்மாநில அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 646
கவர்ச்சிகரமான எண்கள் சலுகையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
பொதுவாக, பிறந்ததேதி, கல்யாண நாள் மற்றும் ராசி எண் என்றுதான் பலர்
பேன்சி எண்களை தேர்வு செய்கின்றனர். அவ்வாறு, ஒரே எண்ணை இரண்டு அல்லது
இரண்டுக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்தால், அவர்களுக்கு இ-ஏலம் விடப்பட
உள்ளது. இந்த இ-ஏலத்திற்காக ரூ. 1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். இதனை
ஆர்டிஓ அலுவகம் திருப்பி தராது.
இந்த இ-ஏலத்தில் யார் வெற்றி பெறுகின்றாரோ அவருக்கே அந்த பேன்சி எண்
வழங்கப்படும். மேலும், அதிக தொகையில் ஏலம் எடுத்தவர், ஏழு நாட்களுக்குள்
வங்கி வரைவோலை அல்லது இணையதளம் மூலமாக பணத்தை செலுத்த வேண்டும். இதில்,
தவறினால் பேன்சி மீண்டும் ஏலத்திற்கு சென்றுவிடும்.
அதேபோன்று, ஏலத்தில் எடுக்கப்பட்ட எண்ணை 90 நாட்களுக்குள் வாகனத்துடன்
பதிவு செய்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்த எண் காலாவதியாகிவிடும்
எனவும் கூறப்படுகின்றது. அதேசமயம், ஏல தொகையும் திருப்பு தரப்படமாட்டாது
என்ற நிபந்தனையையும் ஆர்டிஓ முன்வைத்துள்ளது.
இத்துடன், தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கான வெவ்வேறு அடிப்படை விகிதங்கள் போக்குவரத்துத் துறையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment