விண்வெளி ஆராய்ச்சி உலகை இந்தியா மீது திரும்ப வைத்ததற்கு இவரும் ஒரு
முக்கியமான காரணம். எனினும், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் சாதாரணமாக
இருக்கும் சிவன், படித்ததெல்லாம் அரசுப்பள்ளியில் தான்.
அதிலும் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர் தான் இஸ்ரோ தலைவர் சிவன்.
இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.!
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி வழங்கினார், சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மூன்று
ஆண்டுகளாக அறிவியில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த 3
ஆண்டுகளாக அப்துல்கலாம விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சரிடம் இருந்து விருதை பெற்று கொண்டார்
சுதந்திர தினம் அன்று சிவனால் வரமுடியாத சூழ்நிலையில் தற்போது தலைமை
செயலகத்தில் நேரடியாக வந்து முதலமைச்சரிடம் இருந்து விருதை பெற்று
கொண்டார். மேலும் சிவனை பொறுத்தவரை பல்வேறு சிறப்பு விருதுகளை
பெற்றுள்ளார்.
விக்ரம் சாராபாய் விருது
அதன்படி 1999-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விருது, 2017-ம் ஆண்டு இஸ்ரோ
விருது, 2012-ம் ஆண்டில் டாக்டர் பிரயன் ராய் விருது ஆகியவற்றை
பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தில் முதல் பட்டதாரி
சிவன் அவருடைய குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவார். சிவன் அவர்களின் இரண்டு
சகோதரிகளும், சகோதரர் ஒருவரும் வறுமையின் காரணமாக உயர்கல்வியை கூட படிக்க
முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பின்பு கல்லூரியில் படித்த போது
அவரது தந்தைக்கு விவசாயம் செய்ய உதவியதாகவும், அதன் காரணமாகவே அவரது தந்தை
அருகில் உள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.
37 ஆண்டுகாலம்
சிவன் இளங்களை அறிவியல் கணிதவியல் படிப்பில் 100சதவிகிதம் மதிப்பெண்
பெற்றதால் மனம் மாறிய அவரது தந்தை மேற்படிப்பு படிக்க அனுமதித்துள்ளார்.
1982-ம் ஆண்டு இஸ்ரோவின் சிவனுக்கு வேலை கிடைத்தது, அதுமுதல் கிட்டத்தட்ட
37 ஆண்டுகாலம் இஸ்ரோவில் பணியாற்றிய சிவன் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி,
க்ரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கம், மீண்டும் பயன்படுத்தும் வகையிலான
செயற்கைகோள் ஏவும் வாகனம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்கு
வகித்திருக்கிறார்.
"ராக்கெட் மேன்"
மேலும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக கடந்த
ஜனவரி 2018-ம் நியமனம் செய்யப்பட்ட சிவன் இஸ்ரோவின் அனைத்துவிதமான ராக்கெட்
ஏவும் நிகழ்ச்சிகளிலும் பங்குவகித்தவர் என்பதால் "ராக்கெட் மேன்" என்று
அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் பள்ளியில் படிக்கும்போது அணிந்துகொள்ள செருப்பு கூட இல்லை என்றும்,
தான் முதலில் பேண்ட் அணிந்தது தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த பின்புதான்
என்று ஒருமுறை சிவன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment