வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு தமிழக அரசு விருது: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, August 15, 2019

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு தமிழக அரசு விருது: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

அரிவாளால் வெட்டிய கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டி அடித்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார்.




நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 68). இவரது மனைவி செந்தாமரை. இவர்களுடைய இரு மகன்கள் மற்றும் மகள் வெளியூர்களில் வசிக்கின்றனர். சண்முகவேலும் செந்தாமரையும் கல்யாணிபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றன
கடந்த 11-ந் தேதி அன்று இரவு 9.30 மணி அளவில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் சண்முகவேல் வீட்டுக்கு வந்தனர். அவர்களில் ஒருவன் சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி அவரை கொல்ல முயன்றான். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து செந்தாமரை வெளியே ஓடி வந்தார். உடனே கொள்ளையர்கள் இருவரும் வயதான தம்பதியை அரிவாளால் வெட்ட முயன்றனர்.


ஆனால் அதைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் அந்த வயதான தம்பதியர் நாற்காலிகள், ஸ்டூல், கட்டை உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்கள் மீது வீசி தாக்கினார்கள். அவர்களுடைய தாக்குதலை சமாளிக்க முடியாமல், கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். போகும் போது கொள்ளையர்கள் செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.


இந்த காட்சிகள் அனைத்தும் சண்முகவேல் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. பின்னர் அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதைப் பார்த்த பலரும், கொள்ளையர்களுடன் போராடி துணிச்சலுடன் விரட்டி அடித்த வயதான வீரத்தம்பதியை வியந்து பாராட்டினார்கள்.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நேற்று முன்தினம் சண்முகவேல்-செந்தாமரை தம்பதியின் வீட்டுக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து கொள்ளை சம்பவம் குறித்து கேட்டு அறிந்ததோடு, அவர்களுடைய துணிச்சலை பாராட்டினார்.
அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், கையில் கிடைப்பதை வைத்து துணிச்சலுடன் செயல்பட மற்றவர்களுக்கு இந்த தம்பதி தூண்டுதலாக இருந்ததால், அவர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. எனவே அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பரிந்துரை கடிதம் எழுதினார்.


இதைத்தொடர்ந்து, சண்முகவேல்-செந்தாமரை தம்பதியின் துணிச்சலை பாராட்டி அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
 இதன்படி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது,  சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு, அதீத துணிச்சலுக்கான முதல்-அமைச்சரின் சிறப்பு விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.

No comments:

Post a Comment