வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ATM-களுக்கு செக் வைக்கும் எஸ்பிஐ..! இனி எப்புடிங்க பணம் எடுக்குறது..?.
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, August 20, 2019

ATM-களுக்கு செக் வைக்கும் எஸ்பிஐ..! இனி எப்புடிங்க பணம் எடுக்குறது..?.


நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி நம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தான். இப்போது இந்தியாவில் ஏடிஎம் கார்ட்களைப் பயன்படுத்தும் அனைவருக்கு ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறது. டிஜிட்டல் பேமென்டுகளை ஊக்குவிக்கும் விதமாக டெபிட் கார்டு உள்ளிட்ட பிளாஸ்டிக் கார்டு சேவைகளை யை அகற்ற திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளது. டிஜிட்டல் பேமென்ட் முறையை ஊக்குவிக்கும் விதமாக, இந்த பிளாஸ்டிக் கார்டு திட்டத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள எஸ்.பி.ஐ, இதன் வாடிக்கையாளர்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.



ஐந்தில் ஒரு பங்கு
  டெபிட் கார்டுகளையே என்றும், இது நாட்டின் மக்கள் தொகை அளவில் ஐந்தில் ஒரு பங்கினை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றி கூறியுள்ள எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னேஷ் குமார், டெபிட் கார்டுகளை அகற்றுவது எங்கள் விருப்பம், அவற்றை எங்களால் அகற்ற முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்றும் கடந்த திங்கட்கிழமையன்று annual Fibacல் கூறியுள்ளார். மேலும் நாட்டில் 3 கோடி கிரெடிட் கார்டுகளும், 90 கோடி டெபிட் கார்டுகளும் உள்ளன என்றும் கூறி உள்ளார்.


பிளாஸ்டிக் பயன்பாடு
  இந்த பிளாஸ்டிக் அட்டைகளை குறைப்பதன் மூலம், நாட்டை டெபிட் கார்டு குறைவாக உள்ள நாடாக மாற்றுவதற்கு, எஸ்.பி.ஐ திறவுகோலாக இருக்கும். மேலும் இதற்காக தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுப்பதற்கு வசதியாக, மொபைல் மூலம் பணம் பெறும் யோனோ கேஷ் ஆப்பை பற்றியும் கூறியுள்ளார். மேலும் இந்த யோனோ கேஸ் ஆப்பை ஒருவர் பயன்படுத்தும் போது, அவர்களுக்கு ஏடிஎம்கள் தேவை இருக்காது. .
நோ கார்ட் 
 அவை இல்லாமலேயே அவரால் பணத்தை எடுக்க முடியும். அதோடு கார்டு இல்லாமலேயே, கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு, அதன் வணிக நிறுவனத்திற்கு பணங்கள் செலுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது 68,000 யோனோ கேஸ் பாயிண்டுகள் அமைத்துள்ளதாகவும், இது இன்னும் 18 மாதங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமாக நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விரிவாக்கம் மேலும் டெபிட் கார்டு உபயோகத்தை குறைக்கலாம் என்றும் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.


யோனோ 
 இது தவிர இந்த யோனோ தளம் கிரெடிட் கார்டு தளமாகவும், சில பொருட்களை வாங்குவதற்கு கடனையும் கொடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டெபிட் கார்டுகள், உங்களது பாக்கெட்களின் இருக்கும் தேவை குறைவாகவே இருக்கும் என்றும் குமார் கூறியுள்ளார். ஒருவேளை இந்த திட்டத்தைக் கொண்டு வந்தால், இனி டெபிட் கார்ட்கள் எனப்படுகின்ற ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் இந்தியாவில் ஏழை எளிய மக்கள் எப்படி வங்கிச் சேவையைப் பயன்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை. .




No comments:

Post a Comment