இந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனம் சுருக்கமாக
பி.டி.ஐ.எல். எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர்
கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர், என்ஜினீயர், சீனியர் டிராப்டிங் ஸ்டாப் போன்ற
பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
மொத்தம் 391 பேர் தேர்வு
செய்யப்படுகிறார்கள்.
என்ஜினீயர் பணிக்கு கிரேடு-1 தரத்தில் 61 பேரும், கிரேடு-2 பணிக்கு
171 பேரும், கிரேடு-3 பணிக்கு 109 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர் பணிக்கு 37 பேரும், சீனியர் டிராப்டிங்
ஸ்டாப் பணிக்கு 13 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு
என்ஜினீயர் பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி.
போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான வயது வரம்பை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
விருப்பமும்,
தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.400
கட்டணம் செலுத்த வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள்
21-8-2019-ந் தேதியாகும்.
No comments:
Post a Comment