தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் குழந்தையை கவனித்துக் கொள்ள
முடியாததால் அதை ரூ 1000-த்துக்கு விற்பனை செய்ய முயன்ற தாயை போலீஸார்
கைது செய்தனர்.
வாராங்கல்லில் ஜாங்கான் மாவட்டத்தில் பெம்பார்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர்
ராஜையா. இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.
ராஜையா எந்த வேலைக்கும் செல்லாததால் கைக் குழந்தையை வைத்து குடும்பம் நடத்த
முடியாமல் சுஜாதா கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சுஜாதாவுக்கும்
ராஜையாவுக்கும் நேற்று தகராறு நடந்தது.
கூவி ஏலம்
இதையடுத்து சுஜாதா கணவரிடம் கோபித்து கொண்டு வாராங்கல் பஸ் நிலையத்துக்கு
வந்தார். குழந்தையை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து விடுவதாக கூவி கூவி
ஏலமிட்டார்.
விசாரணை
விசாரணை இதனால் சுஜாதாவின் ஊர்காரர்களும் ஜாங்கான் மாவட்டத்தினரும்
அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ
இடத்துக்கு வந்த போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
வாராங்கல்
அப்போது தனது கணவர் சரியில்லாததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.
இதனால் குழந்தையை விற்க முயற்சித்தேன் என்றார். பின்னர் மேலும் விசாரணையில்
நான் வாராங்கல் பஸ் நிலையத்திலிருந்து ஊருக்கு திரும்ப சிலரிடம் பணம்
கேட்டேன்.
போலீஸ் கைது
அதற்கு அவர்கள் குழந்தை கொடுத்துவிட்டு போ என்றனர் என சுஜாதா தெரிவித்தார்.
மேலும் குழந்தைக்கு 20 நாட்களுக்கு முன்பு சிகிச்சை அளித்த நிலையில்
மருத்துவரை மீண்டும் சந்திக்க செல்வதாகவும் சுஜாதா தெரிவத்தார். இதுபோல்
மாற்றி மாற்றி பேசுவதால் சுஜாதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
காப்பகத்தில்
குழந்தைகள் நல குழுவிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. தாய் மனநிலை
சரியில்லாதவர் போல் பேசுவதால் குழந்தையை அதற்கான காப்பகத்தில்
ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment