பாஜக எம்எல்ஏ ஒருவரின் மகள், தான் காதலித்த தலித் இளைஞருடன் வீட்டை
விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டுள்ளது உத்திரபிரதேச மாநிலத்தையே
பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ரா. இவரது மகள், சாக்ஷி. 23
வயசாகிறது. இவர் காலேஜ் படிக்கும்போதிருந்தே அஜிதேஷ் குமார் என்ற இளைஞரை
காதலித்து வந்தார்.
ஆனால் அஜிதேஷ் குமார் தலித் என சொல்லப்படுகிறது. இதனால் எப்படியும்
வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்து கொள்ள மாட்டார்கள் என்பதால் கோயில் வைத்து
கல்யாணம் செய்து கொண்டனர். பிறகு முறைப்படி திருமணத்தை
பதிவு செய்து அதற்கான சான்றிதழையும் பெற்று விட்டனர்.
இந்நிலையில், தன்னுடைய தந்தை கொலை மிரட்டல் விடுப்பதாகவும், போதிய
பாதுகாப்பு தங்களுக்கு வழங்கக்கோரியும் சோஷியல் மீடியாவில் எல்லாரிடமும்
உதவி கேட்டுள்ளார் மணப்பெண் சாக்ஷி. இது சம்பந்தமான வீடியோவும்
வெளியிட்டுள்ளார்.
அதில், "என்னுடைய அப்பா, அண்ணன், மேலும் சில குண்டர்களால் எங்கள்
உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எங்களுக்கு ரேபரேலி போலீஸார்தான் தகுந்த
பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒருவேளை நாங்கள் ரெண்டு பேரும் கொல்லப்பட்டால்
பரேலி மாவட்டத்தை சேர்ந்த எம்பி., எம்எல்ஏக்கள் என்னுடைய அப்பாவுக்கு
யாரும் உதவக்கூடாது" என்று கேட்டுள்ளார்.
இந்த வீடியோவை எம்எல்ஏவான பெண்ணின் அப்பாவும் பார்த்திருக்கிறார்.
"நான் காதலுக்கு எதிரானவன் கிடையாது, அதனால் மகளை விருப்பமானவனுடன்
சேர்த்து வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் அந்த பையனுக்கு என்
மகளை விட வயசு ரொம்ப அதிகம். அவனுக்கு வேலையும் எதுவுல் இல்லை" என்று
வருத்தமாக சொல்கிறார். பாதுகாப்பு தரலாம் என்றால், ரெண்டு பேரும் எங்கே
இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்று சொல்லும் போலீசார், தம்பதிகளை தேடி
வருகிறார்களாம்.
No comments:
Post a Comment