வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இளைஞர் அடக்கம் செய்வதற்கு சற்று முன்பு எழுந்ததால் அதிர்ச்சி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறப்பட்டனர் விவரம் உள்ளே
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, July 02, 2019

இளைஞர் அடக்கம் செய்வதற்கு சற்று முன்பு எழுந்ததால் அதிர்ச்சி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறப்பட்டனர் விவரம் உள்ளே

விபத்தில் இறந்து போனதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட 20 வயது இளைஞர் சுடுகாட்டில் எரிக்கும் முன் எழுந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.. உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் முகமது பாரூக்கான்.





அவர் கடந்த ஜூன் 21ம் தேதி விபத்தில் சிக்கியதால் தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த பாரூக்கான் உடல்நிலை மோசமடைந்து கடந்த திங்கள்கிழமை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து முகமது பாரூக்கானின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டுவந்தனர். அழுது முடித்து, சுடுகாட்டில் கொண்டு போய் எரிக்க முடிவு செய்தனர்.


 சுடுகாட்டில் வைக்கப்பட்ட பின்னர் பாரூக்கின் உடலில் அசைவுள் இருப்பதை கண்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்சில் பாரூக்கின் உடலை எடுத்துக்கொண்டு ராம் மோகன்ராவ் லோகியா மருத்துவமனைக்கு குடும்பத்தினர் விரைந்தனர்.

இதுபற்றி விசாரித்த மருத்துவர்கள், உடனடியாக பாரூக்கின் உடல்நிலைய பரிசோதித்து உயிர் இருப்பதை உறுதி செய்தனர். அவருக்கு வென்லேட்டிரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்துவருகிறார்கள்.



இது தொடர்பாக முகமது பாரூக்கின் அண்ணன் முகமது இப்ரான் கூறுகையில், எரிப்பதற்காக உடலை முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தோம். அப்போது பாரூக்கின் உதடு அசைவது தெரிந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்தோம்.

இப்போது மருத்துவர்கள் வெண்டிலேட்டரில் வைத்து சிசிக்சை அளித்து வருகிறார்கள். நாங்கள் என் தம்பியை காப்பாற்ற தனியார் மருத்துவமனையில் ரூ.7லட்சம் வரை பணம் கட்டினோம். அதன் பிறகு எங்களிடம் பணம் இல்லை என்று சொன்னோம்.


அதனால் அவர்கள் தம்பியை திங்கள் அன்று இறந்துவிட்தாக அறிவித்துவிட்டார்கள்" என குற்றம்சாட்டினார். இது தொடர்பாக லக்னோ தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் நரேந்திர அகர்வால் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம்.

இச்சம்பவத்தின் உண்மை குறித்து முழுமையாக ஆராயப்படும். சம்பந்தப்பட்ட நோயாளியின் நிலை மோசமாகவே உள்ளது. ஆனால் நிச்சயம் இது மூளைச்சாவு கிடையாது. அவருக்கு இரத்த ஓட்டம், இதய துடிப்பு எல்லாம் இருக்கிறது. வெண்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றார்.




No comments:

Post a Comment