வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உருவானது ரோகினி ஆர்மி...! அரசுக்கு எதிரான போஸ்டரால் பரபரப்பு... | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, July 05, 2019

உருவானது ரோகினி ஆர்மி...! அரசுக்கு எதிரான போஸ்டரால் பரபரப்பு... | Run World Media

சேலம் மாவட்ட ஆட்சியராக திருமதி. ரோகினி அவர்கள் கடந்த 28 அன்று சேலம் மாவட்டத்தில் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டார்.




சேலத்தின் முதல் பெண் கலெக்டரான ரோகினி  எடப்பாடி இட்ட வேலைகளை பக்காவாக செய்து வந்தார். ஆனால் மக்களவை மற்றும் இடைத் தேர்தல் நடந்த நேரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக அவர் நேர்மையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.தேர்தல் பிரசாரத்துக்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலம் வந்தபோது கோட்டை மைதானத்தில் இருந்தபோது எடப்பாடி வீடு இருக்கும் நெடுஞ்சாலை நகர் வரைக்கும் இரு புறமும் அதிமுக, கூட்டணிக் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
அது தேர்தல் விதிமுறை என்று சொல்லி அகற்ற ரோகினி கலெக்டர் உத்தரவிட்டார்.


தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது, கலெக்டர் ரோகினி. விதிகளை கடுமையாக அமல்படுத்தினார். இதே போல் தேர்தல் முடிவுக்குப் பின் இரண்டடுக்கு பாலம் துவக்க விழாவில் சேலம் திமுக எம்.பி. பார்த்திபனை முறைப்படி அழைக்க வேண்டும் என்பதில் ரோகினி கறாராக இருந்தார்.
இப்படி தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அங்குள்ள நிர்வாகிகள் போட்டுக் கொடுத்தாக சொல்லப்படுகிறது. பள்ளி மாணவர்கள் முதல் வயதான தள்ளாடும் முதியவர்கள் வரை  பிரச்னைக்கு தீர்வு கண்டு சேலம் மாவட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்று அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கின்ற வகையில்  பணிகள் தொய்வின்றி செயல்பட்ட ரோகினியை அதிரடியாக  தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக் கல்லூரி பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ரோகினி பணியிட மாற்றம் செய்தியை கேட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது மக்களின் முகத்தில் ஒரு சோகம் தென்பட்டது.  மேலும், இந்தப்பணியிட மாற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அகில பாரத இந்து மகாசபா சார்பில் சேலம் மாநகர் முழுவதும் தமிழக அரசை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் "தமிழக அரசே தமிழக அரசே... நேர்மையாக செயல்பட்ட திறமையான சேலம் மாவட்ட பெண் ஆட்சித்தலைவர் ரோகிணி அவர்கள் பணி இடமாற்றம் செய்ததை கண்டிக்கிறோம். மீண்டும் ரோகினி அவர்களை ஆட்சித்தலைவராக பணியமர்த்த வேண்டும் இப்படிக்கு அகில பாரத இந்து மகாசபா" என தமிழக அரசை கண்டித்து வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்த இந்த கண்டன போஸ்டர்கள் சேலம் மாநகரம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

No comments:

Post a Comment