திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின்னரும் பிற ஆண்களுடன் செல்போனில்
சாட்டிங் செய்வதை பிடிக்காமல் சந்தேகத்தில் பெட்ரோல் ஊற்றி அந்த பெண்ணையே
எரித்து கொலை செய்து விட்டான்.
தெற்கு உக்ரேனில் ஜப்ரோசியா நகரத்தில்
இதயத்தை உறைய வைக்கும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எரித்துக்கொல்லப்பட்ட அந்த பெண்ணின் பெயர் அனஸ்தேஸியா என்பதாகும். இவர்
விட்டாலி சைக்கோஸ்வ்சை என்ற நபரை காதலித்தார்.
இருவருக்கும் பெற்றோர்
ஆசியுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. காதலி மீது ஆரம்பத்தில் இருந்தே
விட்டாலிக்கு சந்தேகம் இருந்தது. காரணம் அனஸ்தேஸியா தன்னைத்தவிர பிற
ஆண்களுடன் பேசுவதை விட்டாலி விரும்பவில்லை.
பொறாமை ஒரு பக்கம், சந்தேகம் மறுபக்கம் என ஆட்டிப்படைக்க அழகான அந்த இளம்
பெண்ணை எரித்து கொலை செய்து விட்டு இப்போது சிறைக்கு போயிருக்கிறான்
விட்டாலி.
காதலி மீது சந்தேகம்
அனஸ்தேஸியா ஜாலியான பெண். அவருக்கு ஆண் நண்பர்கள் அதிகம். அவ்வப்போது தனது
நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். பொறுத்து பொறுத்து பார்த்த விட்டாலி,
ஜூலை 2ஆம் தேதி அனஸ்தேஸியாவை ஒரு அபார்ட்மெண்டிற்கு வரவழைத்தார்.
பேசிப்பார்த்தார் விட்டாலி, ஆனால் அனஸ்தேஸியா தனது வருங்கால கணவர்
விட்டாலியை சமாதானம் செய்ய முயன்றார்.
பெண் எரித்துக்கொலை
பேசிக்கொண்டிருக்கும் போதே கோபத்தோடு அபார்ட்மெண்ட்டை விட்டு வெளியே வந்த
விட்டாலி விடு விடு வென வெளியே போய் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோலை
பாட்டிலில் வாங்கினார்.
அனஸ்தேஸியா இருந்த அபார்ட்மெண்ட்டிற்கு மீண்டும்
வந்த விட்டாலி, தனது வருங்கால மனைவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.
இதில் அனஸ்தேஸியா உடல் முழுவதும் எரிந்தது. தன்னை காப்பாற்றுங்கள் என்று
கத்தி கதறினார். இந்த சம்பவத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர்
அதிர்ச்சியடைந்தனர். போலீசிற்கு தகவல் அளித்தனர்.
தீயில் கருகி பலி
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 90 சதவிகித தீக்காயங்களுடன் கருகிய
நிலையில் இருந்த அனஸ்தேஸியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அனஸ்தேஸியா
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விட்டாலியை காதலித்து திருமணம் செய்ய
ஆசைப்பட்டதைத் தவிர அந்தப்பெண் வேறொரு பாவமும் செய்யவில்லை.
கொலையாளி கைது
பெட்ரோல் நாற்றத்துடன் கையில் காயங்களுடன் இருந்த விட்டாலியை கைது
செய்தனர். காதலியை எரித்தது ஏன் என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த
விட்டாலி, தான் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் பிற ஆண்களுடன் பேசுவதை அவள்
நிறுத்தவில்லை அந்த எரிச்சலில் கொலை செய்தேன் என்று கூறியுள்ளான்.
அதிகரித்த சந்தேகம்
அனஸ்தேஸியாவின் தோழிகள் இந்த கொடுர சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு
அதிர்ச்சியடைந்துள்ளனர். அழகான 22 வயதேயான இளம் பெண்ணிற்கு இப்படி கொடூரம்
நடந்திருக்கக் கூடாது என்று ஆதங்கப்படுகின்றனர்.
விட்டாலியை காதலிக்கும்
போதும் சரி திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின்னரும் சரி நாளுக்கு நாள்
விட்டாலிக்கு சந்தேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அனஸ்தேஸியாவின்
செல்போனை எடுத்து அவர் யாருடன் சாட் செய்திருக்கிறாள் என்று ஆராய்வதே
வேலையாக வைத்திருந்தான்.
சந்தேகத்தில் கொலை
நாளுக்கு நாள் சந்தேகப்பேய் ஆட்டிவைக்க, அழகான அந்தப்பெண்ணை வீட்டிற்கு
வரவழைத்து சண்டை போட்டிருக்கிறான். அந்தப் பெண் சமாதானம் செய்ய முயன்றும்
அதை காதிலேயே போட்டுக்கொள்ளாமல் கடைசியில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை
செய்து விட்டான் அந்த கொடூரன்.
கொலையாளிக்கு சிறை
நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த போது கூட அதற்காக அவன் வருந்தவில்லை.
அவளை காயப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் பெட்ரோலை ஊற்றி தீயை
வைத்துள்ளான். கடைசியில் அவள் முற்றிலும் எரிந்து கரிக்கட்டையாகிப் போனாள்.
விட்டாலி போல ஒரு சந்தேகப்பேயை திருமணம் செய்து கொண்டு தினம் தினம் சாவதை
விட ஒரே நாளில் எரிந்து செத்துப்போனாள் அந்த இளம் பெண். விட்டாலி மீதான
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க
வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment